குவாஹத்தி எய்ம்ஸ் தொடர்பான பிரதமரின் ட்வீட் குறித்து கருத்து தெரிவித்த போதுமக்கள் பலருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடர்புகொண்டு பதிலளித்தார்.
ராஜேஷ் பாரதியாவின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"எய்ம்ஸ் மருத்துவமனையின் சேவையை விரிவுபடுத்துவது மிகவும் திருப்திகரமான முயற்சியாகும். சுகாதாரத்தை அணுகக்கூடியதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்ற நாங்கள் இன்னும் கூடுதலாக செயல்படுவோம்."
Expanding the network of AIIMS has been a very satisfying initiative and we will do more to make healthcare more accessible and affordable. https://t.co/Xi74JBZevt
— Narendra Modi (@narendramodi) April 15, 2023
வடகிழக்கில் உயர் சிறப்பு சிகிச்சை கிடைப்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பேராசிரியர் (டாக்டர்) சுதிர் தாஸுக்கு, பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆம், என் வடகிழக்கு சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் பெரிதும் உதவுவேன்."
Yes will greatly help my sisters and brothers of the Northeast. https://t.co/J6cuAirBNO
— Narendra Modi (@narendramodi) April 15, 2023
ஜோர்ஹாட்டில் குடியிருக்கும் திபாங்கர் பராஷரின் ட்விட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் ட்வீட் செய்துள்ளார்:
"திறக்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் மூலம் அசாமின் வளர்ச்சிப் பாதை மேலும் மேம்படுத்தப்படும்."
Assam’s development trajectory will be further boosted with the works that were inaugurated or their foundation stones laid. https://t.co/weqNXyPKj7
— Narendra Modi (@narendramodi) April 15, 2023