துறவி ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். தமது அரசால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலிலும் பூஜ்ய ஸ்ரீ குரு ரவிதாஸ் அவர்களின் உணர்வு பொதிந்திருப்பதற்குப் பெருமிதம் அடைவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"நாளை மகா துறவி குரு ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாள். சமூகத்திலிருந்து சாதி, தீண்டாமை போன்ற தீய வழக்கங்களை அகற்றுவதற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த விதம், இன்றும் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது."
“இந்தத் தருணத்தில், துறவி ரவிதாஸ் அவர்களின் புனிதத் தலத்தைப் பற்றிய சில விஷயங்களை நான் நினைவுபடுத்துகிறேன். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், இங்கு தரிசனம் மற்றும் லங்கர் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்தப் புனித யாத்திரை தலத்தின் வளர்ச்சிப் பணிகளில் எந்தத் தொய்வும் இருக்காது"
“எங்கள் அரசின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு திட்டத்திலும் பூஜ்ய ஸ்ரீ குரு ரவிதாஸ் அவர்களின் உணர்வை நாங்கள் உள்வாங்கியிருக்கிறோம் என்பதைக் கூறுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, காசியில் அவரது நினைவாக கட்டுமானப் பணிகள் முழு கம்பீரத்துடனும் தெய்வீகத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன"
महान संत गुरु रविदास जी की कल जन्म-जयंती है। उन्होंने जिस प्रकार से अपना जीवन समाज से जात-पात और छुआछूत जैसी कुप्रथाओं को समाप्त करने के लिए समर्पित कर दिया, वो आज भी हम सबके लिए प्रेरणादायी है।
— Narendra Modi (@narendramodi) February 15, 2022
इस अवसर पर मुझे संत रविदास जी की पवित्र स्थली को लेकर कुछ बातें याद आ रही हैं। साल 2016 और 2019 में मुझे यहां मत्था टेकने और लंगर छकने का सौभाग्य मिला था। एक सांसद होने के नाते मैंने ये तय कर लिया था कि इस तीर्थस्थल के विकास कार्यों में कोई कमी नहीं होने दी जाएगी। pic.twitter.com/xDPsxlZGbO
— Narendra Modi (@narendramodi) February 15, 2022
मुझे यह बताते हुए गर्व का अनुभव हो रहा है कि हमने अपनी सरकार के हर कदम और हर योजना में पूज्य श्री गुरु रविदास जी की भावना को समाहित किया है। यही नहीं, काशी में उनकी स्मृति में निर्माण कार्य पूरी भव्यता और दिव्यता के साथ आगे बढ़ रहा है। https://t.co/yWPtspWebi
— Narendra Modi (@narendramodi) February 15, 2022