மறைந்த தேவ் ஆனந்தின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தேவ் ஆனந்த் ஜி எப்போதும் நினைவுகூரப்படும் சிறந்த ஆளுமையாகத் திகழ்கிறார். அவரது கதை சொல்லும் திறமையும், சினிமா மீதான ஆர்வமும் ஈடு இணையற்றவை. அவரது திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கானது மட்டுமல்லாமல், இந்தியாவின் மாறிவரும் சமூகம் மற்றும் அதன் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்தன. அவரது காலத்தால் அழியாத நடிப்பு தொடர்ந்து பல தலைமுறைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவரது 100-வது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.”
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
Dev Anand Ji is remembered as an evergreen icon. His flair for storytelling and passion for cinema were unmatched. His films not only entertained but also reflected the changing society and aspirations of India. His timeless performances continue to influence generations.… pic.twitter.com/j1JdajHUec
— Narendra Modi (@narendramodi) September 26, 2023