ஆச்சார்ய கிருபளானி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக உயர்ந்த தலைவராகவும், அறிவாற்றல், ஒருமைப்பாடு மற்றும் தைரியத்தின் உருவமாகவும் அவரை நினைவு கூர்ந்த திரு மோடி, வளமான, வலிமையான மற்றும் ஏழைகள், விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் இந்தியாவை உருவாக்குவதற்கான அவரது உன்னத தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆச்சார்ய கிருபளானி பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு உயர்ந்த தலைவராகவும், அறிவாற்றல், ஒருமைப்பாடு மற்றும் தைரியத்தின் உருவகமாகவும் இருந்தார். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஆச்சார்ய கிருபளானி அநீதியை எதிர்த்துப் போராட அஞ்சாதவர். வளமான, வலிமையான மற்றும் ஏழைகளும் விளிம்புநிலையில் உள்ளவர்களும் அதிகாரம் பெற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற அவரது உன்னத தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்”.
Remembering Acharya Kripalani on his birth anniversary. He was a towering figure in India’s freedom struggle and an embodiment of intellect, integrity and courage. He was deeply committed to democratic values and principles of social justice.
— Narendra Modi (@narendramodi) November 11, 2024
Acharya Kripalani was unafraid to…