பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழான நிதியுதவியின் அடுத்த தவணைத் தொகையை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, விவசாய பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார். இதன் மூலம் 9.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு, ரூ.19,500 கோடிக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இது 9வது தவணை நிதியுதவி ஆகும்.
இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் இடையே விதைப்பு காலம் பற்றி பேசிய பிரதமர், இன்று பெறப்பட்ட தொகை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ரூ.1 லட்சம் கோடி தொகுப்பிலான கிசான் உள்கட்டமைப்பு நிதி திட்டம், இன்று ஓராண்டை நிறைவு செய்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு கடைகளில் தேன் மற்றும் குங்குமப் பூ விற்பனை திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார். தேன் திட்டம், ரூ.700 கோடி ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது, இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
வரவிருக்கும் 75வது சுதந்திர தினத்தை குறிப்பிட்ட பிரதமர், இது பெருமிதமான தருணம் மட்டும் அல்ல, புதிய தீர்மானங்களுக்கான வாய்ப்பு என கூறினார். வரும் 25 ஆண்டுகளில், இந்தியாவை நாம் எங்கே பார்க்க விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க, நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2047-ம் ஆண்டு 100வது சுதந்திர தினத்தை நாடு நிறைவு செய்யும்போது, இந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில், நமது வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என பிரதமர் குறிப்பிட்டார். புதிய சவால்களை சந்திக்கவும், புதிய சந்தர்ப்பங்களின் சாதகத்தை எடுத்துக் கொள்ளவும், இந்திய வேளாண்மைக்கு வழிகாட்ட இதுதான் சரியான நேரம். மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, இந்திய விவசாயத்தில் மாற்றங்கள் தேவை என அவர் கூறினார்.
பெருந்தொற்று காலத்தில், உற்பத்தியில் வரலாறு படைத்ததற்காக விவசாயிகளை அவர் பாராட்டினார். இந்த சிக்கலான நேரத்தில், விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை அவர் சுட்டிக் காட்டினார். விதைகள், உரங்களின் தடையற்ற விநியோகம் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை அரசு உறுதி செய்தது. யூரியா ஆண்டு முழுவதும் கிடைத்தது மற்றும் சர்வதேச சந்தையில் டிஏபி உரங்களின் விலை பல மடங்கு அதிகரித்தபோதும், அரசு உடனடியாக ரூ.12,000 கோடி மானியத்தை ஏற்பாடு செய்தது. இதனால் இந்த சுமையை விவசாயிகளால் உணரப்படவில்லை.
காரிப் அல்லது ராபி சந்தை பருவமாக இருக்கட்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கொள்முதலை அரசு செய்துள்ளது என பிரதமர் கூறினார். இதன் காரணமாக, சுமார் ரூ.1,70,000 கோடி நெல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சென்றுள்ளது, சுமார் ரூ.85,000 கோடி கோதுமை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பருப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளிடம் வலியுறுத்தியதை பிரதமர் நினைவுப்படுத்தினார். இதன் காரணமாக, கடந்த 6 ஆண்டுகளில், நாட்டில் பருப்பு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேசிய சமையல் எண்ணெய் திட்டம் - பாமாயில்-ஐ சுட்டிக் காட்டிய பிரதமர், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய எடுத்த உறுதிமொழிதான் தேசிய சமையல் எண்ணெய் திட்டம்-பாமாயில் என கூறினார். இன்றைய வரலாற்று சிறப்புமிக்க நாளில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை, நாடு நினைவுக் கூறுகையில், இந்த தீர்மானம், நமக்கு புதிய சக்தியை அளிக்கிறது என அவர் கூறினார். தேசிய சமையல் எண்ணெய் -பாமாயில் திட்டம் மூலம், சமையல் எண்ணெய் உற்பத்திக்கு ரூ.11,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என அவர் கூறினார். தரமான விதைகள் முதல் தொழில்நுட்பம் வரை விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்யும். முதல் முறையாக, வேளாண் ஏற்றுமதியில் முதல் 10 நாடுகளில், இந்தியா இடம்பிடித்துள்ளது என பிரதமர் சுட்டிக் காட்டினார். கொரோனா காலத்தில், வேளாண் ஏற்றுமதியில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இன்று, இந்தியா மிகப் பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக அங்கீகரிக்கப்படும் போது, சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரியானது அல்ல.
நாட்டின் வேளாண் கொள்கைளில் சிறு விவசாயிகளுக்கு, தற்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் குறிப்பிட்டார். இந்த உணர்வுடன், கடந்த சில ஆண்டுகளில், சிறு விவசாயிகளுக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1 லட்சம் மோடி கொரோனா காலத்தில், சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன. இதுபோன்று விவசாயிகள், நாட்டில் வரவுள்ள வேளாண் கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புகளால் பயனடைவர். உணவு பூங்காக்கள், கிசான் ரயில்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி ஆகியவை சிறு விவசாயிகளுக்கு உதவும். கடந்தாண்டில், உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள், சிறு விவசாயிகளின் சந்தைகளுக்கான அணுகலையும், விவசாய உற்பத்தியாளர் சங்கம் மூலம் பேரம் பேசும் சக்தியையும் அதிகரித்தது என்றும் பிரதமர் கூறினார்.
अब से कुछ दिन बाद ही 15 अगस्त आने वाला है।
— PMO India (@PMOIndia) August 9, 2021
इस बार देश अपना 75वां स्वतंत्रता दिवस मनाने जा रहा है।
ये महत्वपूर्ण पड़ाव हमारे लिए गौरव का तो है ही, ये नए संकल्पों, नए लक्ष्यों का भी अवसर है।
इस अवसर पर हमें तय करना है कि आने वाले 25 वर्षों में हम भारत को कहां देखना चाहते हैं: PM
देश जब आज़ादी के 100 वर्ष पूरे करेगा, 2047 में तब भारत की स्थिति क्या होगी, ये तय करने में हमारी खेती, हमारे किसानों की बहुत बड़ी भूमिका है।
— PMO India (@PMOIndia) August 9, 2021
ये समय भारत की कृषि को एक ऐसी दिशा देने का है, जो नई चुनौतियों का सामना कर सके और नए अवसरों का लाभ उठा सके: PM @narendramodi
सरकार ने खरीफ हो या रबी सीज़न, किसानों से MSP पर अब तक की सबसे बड़ी खरीद की है।
— PMO India (@PMOIndia) August 9, 2021
इससे, धान किसानों के खाते में लगभग 1 लाख 70 हज़ार करोड़ रुपए और गेहूं किसानों के खाते में लगभग 85 हज़ार करोड़ रुपए डायरेक्ट पहुंचे हैं: PM @narendramodi
कुछ साल पहले जब देश में दालों की बहुत कमी हो गई थी, तो मैंने देश के किसानों से दाल उत्पादन बढ़ाने का आग्रह किया था।
— PMO India (@PMOIndia) August 9, 2021
मेरे उस आग्रह को देश के किसानों ने स्वीकार किया।
परिणाम ये हुआ कि बीते 6 साल में देश में दाल के उत्पादन में लगभग 50 प्रतिशत की वृद्धि हुई है: PM @narendramodi
इस मिशन के माध्यम से खाने के तेल से जुड़े इकोसिस्टम पर 11 हज़ार करोड़ रुपए से अधिक का निवेश किया जाएगा।
— PMO India (@PMOIndia) August 9, 2021
सरकार ये सुनिश्चित करेगी कि किसानों को उत्तम बीज से लेकर टेक्नॉलॉजी, हर सुविधा मिले: PM @narendramodi
खाने के तेल में आत्मनिर्भरता के लिए अब राष्ट्रीय खाद्य तेल मिशन-ऑयल पाम यानि NMEO-OP का संकल्प लिया गया है।
— PMO India (@PMOIndia) August 9, 2021
आज जब देश भारत छोड़ो आंदोलन को याद कर रहा है, तो इस ऐतिहासिक दिन ये संकल्प हमें नई ऊर्जा से भर देता है: PM @narendramodi
आज भारत कृषि निर्यात के मामले में पहली बार दुनिया के टॉप-10 देशों में पहुंचा है। कोरोना काल में देश ने कृषि निर्यात के नए रिकॉर्ड बनाए हैं।
— PMO India (@PMOIndia) August 9, 2021
आज जब भारत की पहचान एक बड़े कृषि निर्यातक देश की बन रही है तब हम खाद्य तेल की अपनी ज़रूरतों के लिए आयात पर निर्भर रहें, ये उचित नहीं है: PM