தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பல்வேறு உலக அமைப்புகளின் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் மேம்பட்ட துப்புரவு மற்றும் தூய்மை மூலம் தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு இந்தியாவை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியுள்ளது என்பதை தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்-சின் வாழ்த்துக்கள் குறித்து MyGov தளத்தில் எக்ஸ் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்:
"உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியைப் பாராட்டியதோடு, தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டில் அரசின் முயற்சிகளைப் பாராட்டினார். தூய்மையான மற்றும் ஆரோக்கியமான தேசத்தை ஊக்குவிப்பதற்காக சமூகங்களை அணிதிரட்டும் இந்த உருமாறும் முயற்சியின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அவர் எடுத்துரைத்தார். #10YearsOfSwachhBharat #SBD2024 #SHS2024"
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவின் வாழ்த்து குறித்து MyGov தளத்தில் எக்ஸ் பதிவை திரு மோடி பகிர்ந்துள்ளார்:
"உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா , தூய்மை இந்தியா இயக்கம் மேம்பட்ட சுகாதாரத்தின் மூலம் இந்தியாவைக் கணிசமாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். #10YearsOfSwachhBharat #SBD2024 #SHS2024"
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகவா-வின் வாழ்த்து குறித்து MyGov மூலம் எக்ஸ் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்:
"ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா, தூய்மை இந்தியா இயக்கத்தை முன்னெடுத்ததற்காக பிரதமர் திருநரேந்திர மோடியைப் பாராட்டினார். ஆரம்பத்திலிருந்தே இந்தத் தொலைநோக்கு முயற்சியில் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்திருப்பதில் ஆசிய வளர்ச்சி வங்கி பெருமிதம் கொள்கிறது என்று அவர் கூறினார். #10YearsOfSwachhBharat #SBD2024 #SHS2024"
ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழ்த்துக்கள் குறித்து MyGov தளம் மூலம் திரு மோடி ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்:
“நமது மதிப்பிற்குரிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்து, தூய்மையின் மீது மக்களின் கவனம் திரும்பியிருப்பதைக் காண்கிறோம் என்று . ஆன்மீகத்தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார். #10YearsOfSwachhBharat #SBD2024 #SwachhBharat"
டாடா அறக்கட்டளை தலைவர் திரு. ரத்தன் டாடாவின் வாழ்த்து குறித்து MyGov தளத்தில் எக்ஸ் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்:
"தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுநிறைவில் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று டாடா அறக்கட்டளை தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார். #10YearsOfSwachhBharat @RNTata2000 @narendramodi #SBD2024 #SwachhBharat"
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளதை மைகவ் தளத்தில் எக்ஸ் பதிவை திரு மோடி பகிர்ந்துள்ளார்:
"சுகாதாரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் தாக்கம் வியக்கத்தக்கது - @BillGates, மைக்ரோசாப்ட் நிறுவனரின் #10YearsOfSwachhBharat பற்றிய எண்ணங்களைக் கேளுங்கள். #NewIndia #SwachhBharat"
Dr. Tedros Adhanom Ghebreyesus, Director-General of WHO, praised PM @narendramodi and commended the efforts of the government on the 10th anniversary of the Swachh Bharat Mission.
— MyGovIndia (@mygovindia) October 2, 2024
He highlighted the significant strides made in achieving sustainable development goals through… pic.twitter.com/mhkuhbSzDL
Ajay Banga, President of the World Bank, remarked that the Swachh Bharat Mission has significantly transformed India through improved sanitation, achieving a remarkable milestone under the visionary leadership of PM @narendramodi.#10YearsOfSwachhBharat#SBD2024#SHS2024 pic.twitter.com/z3f2gjHp2z
— MyGovIndia (@mygovindia) October 2, 2024
Masatsugu Asakawa, President of the Asian Development Bank, commended PM @narendramodi for spearheading the Swachh Bharat Mission, a transformational campaign.
— MyGovIndia (@mygovindia) October 2, 2024
He stated that the Asian Development Bank is proud to have partnered with India on this visionary initiative from the… pic.twitter.com/P0QERfVA5X
हमारे आदरणीय प्रधानमंत्री @narendramodi जी ने स्वच्छ भारत अभियान को जब से देश भर में शुरू किया है तब से हम देख रहे हैं कि स्वच्छता पर लोगों का ध्यान लौट कर आया है: Sri Sri Ravi Shankar, Spiritual Leader on #10YearsOfSwachhBharat #SBD2024 #SwachhBharat pic.twitter.com/Qqh3hblPTB
— MyGovIndia (@mygovindia) October 2, 2024
I congratulate the Hon. PM @narendramodi on this occasion marking the #10YearsOfSwachhBharat - @RNTata2000, Chairman, Tata Trusts #SBD2024 #SwachhBharat pic.twitter.com/kQxS6Lp5hx
— MyGovIndia (@mygovindia) October 2, 2024
The impact of Swachh Bharat Mission on sanitation health has been amazing - @BillGates , Founder, Microsoft and Philanthropist
— MyGovIndia (@mygovindia) October 2, 2024
Hear his thoughts on #10YearsOfSwachhBharat.#NewIndia #SwachhBharat pic.twitter.com/fljoaE008u