QuoteThe two leaders reaffirm commitment towards further strengthening of bilateral ties
QuotePM Frieden appreciates India’s role in supporting an early end to conflict in Ukraine
QuotePM extends invitation to H.R.H the Grand Duke Henri and Prime Minister Frieden to India

லக்சம்பர்க்கின் பிரதமர் திரு. லுக் ஃப்ரீடன், பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் திரு  ஃபிரீடனின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையேயான பன்முக ஒத்துழைப்புக்கு உத்வேகம் அளிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வர்த்தகம், முதலீடு, நீடித்த நிதி, தொழில்துறை உற்பத்தி, சுகாதாரம், விண்வெளி மற்றும் மக்கள் இடையேயான இணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த பணியாற்றுவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

உக்ரைன் மோதல் உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதிலும் இந்தியா ஆற்றி வரும் பங்கை பிரதமர் திரு ஃப்ரீடன் பாராட்டினார்.

இந்தியாவுக்கு வருகை தருமாறு கிராண்ட் டியூக் திரு. ஹென்றி மற்றும் பிரதமர் திரு ஃப்ரீடன் ஆகியோருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'Team Bharat' At Davos 2025: How India Wants To Project Vision Of Viksit Bharat By 2047

Media Coverage

'Team Bharat' At Davos 2025: How India Wants To Project Vision Of Viksit Bharat By 2047
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 22, 2025
January 22, 2025

Appreciation for PM Modi for Empowering Women Through Opportunities - A Decade of Beti Bachao Beti Padhao

Citizens Appreciate PM Modi’s Effort to bring Growth in all sectors