ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பனீஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆஸ்திரேலிய பிரதமரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார்.
2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தையும், கடந்த செப்டம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் அல்பானீஸை சந்தித்ததையும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட முன்னுரிமைகளில் ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றவும், தமது உறுதியான அர்ப்பணிப்பை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Very glad to speak to my friend @AlboMP. Thanked him for the warm wishes and congratulations. Look forward to working together to strengthen India-Australia Comprehensive Strategic Partnership and cooperation in the Indo-Pacific.
— Narendra Modi (@narendramodi) June 6, 2024