பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிர் இழப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். நிலைமையை விரைவாகத் தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
அடுத்த ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டுக்கு பிரேசிலின் தலைமை பதவிக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் பிரதமர் தெரிவித்தார்.
புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் சந்திப்பைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.