நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பணியாற்றுவோம்: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று சுவாமி சமர்த் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க அரசு எப்போதும் பாடுபடும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

"இன்று, சுவாமி சமர்த்தின் நினைவுப் பரிசை பரிசாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதை என்றென்றும் போற்றுவேன்... அவரது உன்னத எண்ணங்களும் போதனைகளும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன. நமது சமூகத்திற்கான அவரது பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் முயற்சிப்போம்."