முன்னாள் குடியரசுத் தலைவரின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, 'பிரணாப் மை ஃபாதர்: ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ்’ (எனது தந்தை பிரணாப்: ஒரு மகளின் நினைவுகள்) என்ற புத்தகத்தின் பிரதியைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஷர்மிஸ்தா ஜி உங்களைச் சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். பிரணாப் பாபுவுடனான மறக்கமுடியாத உரையாடல்களை நினைவில் கொள்கிறேன். அவரின் மகத்துவமும், ஞானமும், அறிவின் ஆழமும் உங்கள் நூலில் தெளிவாகத் தெரிகிறது!"
Always a delight to meet you Sharmistha Ji and remember the memorable interactions with Pranab Babu. His greatness, wisdom and intellectual depth is clearly visible in your book! https://t.co/N89X0QCFZQ
— Narendra Modi (@narendramodi) January 15, 2024