‘ஹெம்கோஷ்’ என்ற அசாமிய அகராதியின் பிரெய்ல் பதிப்பின் பிரதியை திரு ஜெயந்தா பருவாவிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெற்றுக் கொண்டுள்ளார். ஹெம்கோஷ் என்பது 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அசாமிய அகராதிகளுள் ஒன்றாகும். பிரெய்ல் பதிப்பை வெளியிடுவதற்கு திரு ஜெயந்தா பருவாவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட முயற்சிகளை திரு மோடி பாராட்டினார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அசாமிய அகராதிகளுள் ஒன்றான ஹெம்கோஷின் பிரெய்ல் பதிப்பின் பிரதியைப் பெற்றுக் கொண்டது, மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பிரெய்ல் பதிப்பை வெளியிடுவதற்கு திரு ஜெயந்தா பருவாவும் அவரது குழுவினரும் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.”
Glad to have received a copy of the Braille version of ‘Hemkosh’, which was among the earliest Assamese dictionaries dating back to the 19th century. I compliment Mr. Jayanta Baruah and his team for his efforts leading to the publication of the Braille version. pic.twitter.com/OX7YtV1Koq
— Narendra Modi (@narendramodi) September 21, 2022