குடியரசுத்துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர், தனது தாயாரை கௌரவிக்கும் வகையில் மரக்கன்றை நடுவது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், புதுதில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள இயற்கைச் சூழல் தளமான ஆசிதாவில் தனது தாயார் திருமதி கேசரி தேவி அவர்களின் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டார்.
இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"முன்மாதிரி! மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள், தனது தாயாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு மரம் நடுவது அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது."
अनुकरणीय! माँ के आदर और सम्मान में माननीय @VPIndia जी का पेड़ लगाना हर किसी को प्रेरित करने वाला है।#एक_पेड़_माँ_के_नाम https://t.co/BjxOtl7rOe
— Narendra Modi (@narendramodi) July 27, 2024