நிலைத்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை 334 பி-இல் 40.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெகிழி கழிவுகள் மற்றும் சாம்பல் போன்றவை பயன்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம்- ஹரியானா எல்லை அருகே உள்ள பாக்பாத்திலிருந்து ஹரியானாவின் ரோனா வரை இந்தப் பாதை அமைந்துள்ளது.
மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“நிலையான வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பின் மிகச்சிறந்த கலவை. பொருளாதார வளர்ச்சியையும் இது ஊக்குவிக்கும்.”
A perfect blend of sustainable development and enhanced connectivity. It will also boost economic growth. https://t.co/1YWvD84mWY
— Narendra Modi (@narendramodi) June 14, 2023