ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் நிறுவனத்தில் முதலாவது பழங்குடியின விளையாட்டுத் திருவிழா நடத்தப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியை மிகப்பெரிய தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் பழங்குடியின விளையாட்டு வீரர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.
அமிர்தப் பெருவிழாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
“நமது விளையாட்டுத் துறையில் இது ஒரு மிகப்பெரிய துவக்கம்! சர்வதேச போட்டிகளில் இந்தியா அங்கீகாரம் பெறுவதில் பழங்குடியின வீரர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இத்தகைய முயற்சிகளால் இந்த பிரிவைச் சேர்ந்த ஏராளமான திறமையானவர்கள் நாட்டிற்குக் கிடைப்பார்கள்.”
हमारे खेल जगत में एक बड़ी शुरुआत! वैश्विक स्पर्धाओं में भारत को पहचान दिलाने में जनजातीय खिलाड़ियों की बड़ी भूमिका रही है। ऐसे प्रयासों से देश को इस समुदाय से नए-नए टैलेंट मिलेंगे। https://t.co/NTQkwEFAMn
— Narendra Modi (@narendramodi) June 14, 2023