தேர்வு குறித்து தான் இயற்றிய கவிதையை பகிர்ந்து கொண்டுள்ள டேராடூன் ஓஎன்சிஜி கேந்திரிய வித்யாலயா மாணவி தியாவுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
‘’ சிறைந்த படைப்பாற்றல்! மன அழுத்தம் இல்லாத தேர்வுகளே சிறந்த தேர்வுகளாகும். இம்மாதம் 27ந்தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சியின் போது நாம் இதுபற்றி கூடுதலாக விவாதிக்கலாம்’’
Very creative! Stress free exams are the best exams. We shall discuss this and more during #ParikshaPeCharcha2023 on the 27th of this month. https://t.co/12RCaDMWOk
— Narendra Modi (@narendramodi) January 7, 2023