ராஜஸ்தானின் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி ஆலயத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பூஜை செய்து வழிபட்டார். மேலும் பகவான் ஸ்ரீநாத்திற்கு பள்ளியறை பூஜை நடத்தி கோவில் பூசாரிகளுடன் கலந்துரையாடினார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நத்வாராவில் உள்ள பகவான் ஸ்ரீநாத்தை வழிபடும் நல்வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டேன். நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நாட்டு மக்களுக்கு நலன் செய்வதற்கான வாய்ப்பையும் அளிக்குமாறு வேண்டினேன்”.
नाथद्वारा में भगवान श्रीनाथजी के दर्शन और आशीर्वाद का सौभाग्य प्राप्त हुआ। उनसे देशवासियों के उत्तम स्वास्थ्य और कल्याण की कामना की। pic.twitter.com/iUgpcGiER7
— Narendra Modi (@narendramodi) May 10, 2023