தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வழிபாடு மற்றும் பூஜையில் ஈடுபட்டார்.
இந்தக் கோயில் அருள்மிகு கோதண்டராம சுவாமிக்காகக் கட்டப்பட்டது. கோதண்டராமர் என்றால் வில் கொண்ட ராமர் என்று பொருள். இது தனுஷ்கோடி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குதான் விபீஷணன் முதன்முதலில் ஸ்ரீராமரைச் சந்தித்து அடைக்கலம் கேட்டார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீராமர் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் நடத்திய தலம் இது என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
"புகழ்பெற்ற கோதண்டராம சுவாமி கோவிலில் வழிபாடு மேற்கொண்டேன். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்”
Prayed at the iconic Kothandaramaswamy Temple. Felt extremely blessed. pic.twitter.com/0rs58qqwex
— Narendra Modi (@narendramodi) January 21, 2024