Ram belongs to everyone; Ram is within everyone: PM Modi in Ayodhya
There were efforts to eradicate Bhagwaan Ram’s existence, but He still lives in our hearts, he is the basis of our culture: PM
A grand Ram Temple will become a symbol of our heritage, our unwavering faith: PM Modi

அயோத்தியில் `ஸ்ரீராம் ஜன்மபூமி மந்திரில்’ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பூமி பூஜை நடத்தினார்.

இந்தியாவின் பெருமைக்குரிய அத்தியாயம்

நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், இந்தப் புனிதமான தருணத்தில் நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் உள்ள ராம பக்தர்களுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார். இது வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் இன்றைக்குப் பெருமைக்குரிய ஒரு சகாப்தம் தொடங்கியுள்ளதாகக் கூறினார். பல நூற்றாண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, இறுதியில் லட்சியத்தை எட்டியது குறித்து நாடு முழுவதிலும் உள்ள மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன், மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். தங்கள் வாழ்நாளில் இந்த நிகழ்வு நடப்பதை சிலரால் நம்ப முடியவில்லை. உடைப்பு, மறுபடி கட்டுவது என்ற சுழற்சிகளில் இருந்து ராம் ஜன்மபூமி விடுதலை பெற்றுள்ளது என்றும், கூடாரங்கள் இருந்த இடத்தில் இப்போது பிரமாண்டமான ராம்லாலா கோவில் கட்டப்படுகிறது என்றும் கூறினார்.

சுதந்திரப் போராட்டத்தில் நாடு முழுக்க பலரும் செய்த தியாகங்களை நினைவுகூர்வதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி இருப்பதைப் போல, ராம் மந்திருக்காக பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நடந்த போராட்டங்கள் மற்றும் தீவிர அர்ப்பணிப்புகளின் அடையாளமாக இன்றைய நாள் இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். ராம் மந்திர் என்ற கனவை நனவாக்குவதற்காகப் போராடிய அனைவரின் பங்களிப்பையும் பிரதமர் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.

 

 

 

 

 

ஸ்ரீராம் – நமது கலாச்சாரத்தின் அடித்தளம்

ஸ்ரீராமரின் இருப்பையே பலர் கேள்விக்கு உள்ளாக்கிய நிலையில், நமது கலாச்சாரத்தின் அடித்தளமாக ஸ்ரீராமர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார். நமது கலாச்சாரம், காலவரையறைகளைக் கடந்த நம்பிக்கை, தேசிய உணர்வு, கூட்டு மன உறுதி ஆகியவற்றின் நவீன அடையாளமாக ராம் மந்திர் இருந்து அடுத்து வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் கூறினார். பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார நிலையை மாற்றக் கூடியதாகவும் இந்தக் கோவில் உருவாக்கும் பணி அமையும் என்று அவர் தெரிவித்தார்.

கோடிக்கணக்கான ராம பக்தர்களின்  நம்பிக்கைக்கும், உறுதிக்கும் கிடைத்த வெற்றியின் சாட்சியாக இந்த நாள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, அனைவருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், அனைத்துத் தரப்பு மக்களும் காட்டிய கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அதேபோன்ற கண்ணியமும், கட்டுப்பாடும் இன்றைக்கும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீராமரின் வெற்றி, கோவர்த்தன மலையை தூக்கிய ஸ்ரீகிருஷ்ணர், சத்ரபதி சிவாஜி சுயராஜ்யத்தை ஏற்படுத்தியது, சுதந்திரப் போராட்டத்தை காந்திஜி முன்னின்று நடத்தியது போன்ற சிறப்புக்குரிய விஷயங்களில்,  ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் முக்கியமான பங்கு வகித்துள்ளனர் என்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார். அதேபோல சாதாரண குடிமக்களின் உதவியுடனும், பங்களிப்புடனும் ராம் மந்திர் கட்டும் பணி தொடங்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீராமரின் சிறப்பு குணங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், எப்போதும் உண்மையின் பக்கமாக ஸ்ரீராமர் நின்றார் என்றும், தனது ஆட்சியில் சமூக நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்தார் என்றும் தெரிவித்தார். தன் ஆட்சியில் அனைத்து உயிர்களையும் சமமாக மதித்தார். ஏழைகள், உதவி தேவைப்படுவோர் மீது விசேஷமான அன்பு காட்டினார். ஸ்ரீராமரின் வாழ்வில் நமக்கு உத்வேகம் தராத செயல்பாடு எதுவுமே கிடையாது. நாட்டின் கலாச்சாரம், தத்துவம், நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பல அம்சங்களில் அவருடைய தாக்கத்தைக் காண முடிகிறது என்றும் பிரதமர் கூறினார்.

ஶ்ரீராமர்– வேற்றுமையில் ஒற்றுமை காணும் இழை

பண்டைக்காலத்தில் வால்மீகி ராமாயணத்தின் மூலமும், அதன் பின்னர் இடைக்காலத்தில், துளசிதாசர், கபீர், குருநானக் ஆகியோர் மூலமாகவும், அகிம்சை, சத்தியாகிரகம் ஆகியவற்றின் சக்தியாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் பஜனைகளிலும், ஶ்ரீராமர் மக்களுக்கு வழிகாட்டும் ஒளி  விளக்காகத் திகழ்ந்தார் என பிரதமர் கூறினார். ஶ்ரீராமருடன், புத்த பகவானும் தொடர்புடையவர் ஆவார். அயோத்தி நகரம், பல நூற்றாண்டுகளாக சமணர்களின் நம்பிக்கை மையமாக இருந்து வந்தது என அவர் கூறினார். ராமாயணம் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வகையில், அதனை இணைக்கும் பொது நூலாக ஶ்ரீராமர் இருக்கிறார் என்றார்.   

பல்வேறு  நாடுகளில் ஶ்ரீராமர் மதிக்கப்படுவதாக பிரதமர் கூறினார். அதிக அளவில் இஸ்லாமியர்களைக் கொண்ட நாடான இந்தோனேசியா மற்றும் கம்போடியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் ராமாயணம் புகழ் பெற்று விளங்குவதாக பிரதமர் பட்டியலிட்டார். ஶ்ரீராமரைப் பற்றிய குறிப்புகள் ஈரான், சீனா ஆகிய நாடுகளில் காணப்படுவதாகத் தெரிவித்தார். இதேபோல, ராமர் கதை பல்வேறு நாடுகளில் வழங்கப்படுவதாக அவர் கூறினார். இந்த அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்கள் ராமர் கோவில் கட்டுமானம் இன்று துவங்குவது குறித்து மகிழ்ச்சியாக உணருவார்கள் என அவர் கூறினார்.

மனித குலம் முழுவதற்கும் உத்வேகம்

இந்தக் கோவில் இனி வரும் பல காலங்களுக்கும், மனித குலம் முழுவதற்கும் உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.  ஶ்ரீராமர், ராமர் கோவில், நமது பன்னெடுங்காலப்  பாரம்பரியம் ஆகியவை குறித்த செய்திகள் உலகம் முழுவதையும் எட்டியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

ராம ராஜ்யம்

மகாத்மா காந்தி கனவு கண்ட ராம ராஜ்யத்தின் வரம்புகள் குறித்து பிரதமர் நினைவு கூர்ந்தார். எவரும் ஏழையாகவோ, மகிழ்ச்சியற்றவராகவோ இருக்கக்கூடாது; ஆண்களும் , பெண்களும் சரிசமமான மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்; விவசாயிகளும், விலங்குகளைப் பாதுகாப்பவர்களும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்; வயதானவர்கள், குழந்தைகள், மருத்துவர்கள் ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும்; தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பது அனைவரின் கடமை;  தாய்நாடு சொர்க்கத்தை விட மேலானது; ஒரு நாட்டின் அதிக ஆற்றல், மென்மேலும் அமைதியை நிலைநாட்டுவது என்பன உள்ளிட்ட ஶ்ரீராமரின் போதனைகள் நாட்டை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றன என அவர் கூறினார். ஶ்ரீராமர் நவீனத்துவத்துக்கும், மாற்றத்துக்கும் உதாரணமாகத் திகழ்கிறார் என்று கூறிய பிரதமர், ஶ்ரீராமரின் இந்த லட்சியங்களைப் பின்பற்றி, நாடு முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.

பரஸ்பர அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படை

பரஸ்பர அன்பு மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் மீது கோவில் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அனைவருக்காகவும், அனைவரும் இணைந்து, தன்னம்பிக்கையுடன், தற்சார்பு இந்தியா மூலமாக அனைவரது வளர்ச்சியை நாம் எட்டுவது அவசியம் என்று அவர் கூறினார். எந்த தாமதமும் இல்லாமல் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற ஶ்ரீராமரின் ஆசியுடன் நாடு அதனை பின்பற்றிச் செல்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

கோவிட் காலத்தில் ‘மரியாதை

கோவிட் சூழலில் , ஶ்ரீராமரின் ‘மரியாதை’ வழியின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்த பிரதமர், தற்போதைய காலச்சூழல், ‘இருவருக்கும் இடையே கஜ தூரம்’, ‘முகக்கவசம் அவசியம்’ என்பதை வலியுறுத்துகிறது என்று கூறினார்.  இதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage