பஞ்சாப் கேசரி லாலா லஜபதி ராய் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"பாரத அன்னையின் கடின உழைப்பாளிப் புதல்வனான பஞ்சாப் கேசரி லாலா லஜபதி ராய் பிறந்த தினத்தையொட்டி, நாட்டுமக்கள் அனைவரின் சார்பிலும், அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். சுதந்திர இயக்கத்தின் இந்த மாபெரும் தலைவர் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடியபோது தமது உயிரைத் தியாகம் செய்தார். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும், சேவையும் எப்போதும் மதிப்புடன் நினைவுகூரப்படும்.”
समस्त देशवासियों की ओर से भारत माता के कर्मठ सपूत पंजाब केसरी लाला लाजपत राय को उनकी जयंती पर कोटि-कोटि नमन। आजादी के आंदोलन के इस महानायक ने विदेशी हुकूमत से लोहा लेते हुए अपने जीवन का बलिदान कर दिया। मातृभूमि के लिए उनका समर्पण और सेवा भाव हमेशा श्रद्धापूर्वक याद किया जाएगा। pic.twitter.com/8MuDrunIKl
— Narendra Modi (@narendramodi) January 28, 2025