ஜெய்ப்பூரில் தனக்யாவில் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நினைவிடத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். "அந்தியோதயா கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டில் மிகவும் ஏழ்மையான மக்களின் வாழ்க்கையை எளிதாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது" என்று பிரதமர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
"ஜெய்ப்பூரில் உள்ள தன்கியாவில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தேசிய நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அவரது பிறந்த நாளில், அவரது வாழ்க்கை தொடர்பான பல்வேறு அம்சங்களை இங்கே காணும்போது ஒரு புதிய சக்தி பிறந்தது. அவரது அந்தியோதயா கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டில் மிகவும் ஏழ்மையான மக்களின் வாழ்க்கையை எளிதாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது."
जयपुर के धानक्या में आज पंडित दीनदयाल उपाध्याय राष्ट्रीय स्मारक जाकर उन्हें पुष्पांजलि अर्पित की। उनकी जन्म-जयंती पर यहां उनके जीवन से जुड़े अलग-अलग पहलुओं को देखकर एक नई ऊर्जा का अनुभव हुआ। हमारी सरकार उनके अंत्योदय के सिद्धांत पर चलकर देश के गरीब से गरीब का जीवन आसान बनाने के… pic.twitter.com/Bu5NdIJnGJ
— Narendra Modi (@narendramodi) September 25, 2023