மகாராணா பிரதாப், துணிச்சல், தைரியம், பெருமையின் அடையாளம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மகாராணா பிரதாப்பின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர், தாய்நாட்டிற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், அவருடைய வாழ்க்கை முறை எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
“துணிச்சல், தைரியம், சுயமரியாதையின் அடையாளமாகத் திகழ்ந்த மகாராணா பிரதாப்புக்கு அவருடைய பிறந்த தினத்தில் மரியாதையுடன் கூடிய அஞ்சலி. தாய்நாட்டிற்காக தமது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த அவரது செயல் அனைத்து தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கும்.”
साहस, शौर्य और स्वाभिमान के प्रतीक महाराणा प्रताप को उनकी जन्म-जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। उन्होंने अपना संपूर्ण जीवन मातृभूमि की रक्षा के लिए समर्पित कर दिया, जो देश की हर पीढ़ी के लिए प्रेरणास्रोत बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) May 9, 2023