லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்துள்ள பிரதமர், அவரது தன்னலமற்ற சேவை மனப்பான்மை நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“முழுப் புரட்சியின் தந்தையான லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளில் அவருக்குத் தலைவணங்குகிறேன். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தப் பாடுபட்டார். அவரது தன்னலமற்ற சேவை நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்."
संपूर्ण क्रांति के जनक लोकनायक जयप्रकाश नारायण को उनकी जयंती पर शत-शत नमन। वे जीवनपर्यंत भारतीय लोकतंत्र को सशक्त करने की दिशा में प्रयासरत रहे। उनका निस्वार्थ सेवा भाव देशवासियों को सदैव प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 11, 2023