டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“சிறந்த தேசிய சிந்தனையாளர், கல்வியாளர் மற்றும் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாளில் அவருக்கு பலநூறு வணக்கங்கள். வலிமையான இந்தியாவை உருவாக்கத் தமது வாழ்நாளை அவர் அர்ப்பணித்தார். அவரது லட்சியங்களும் கொள்கைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்."
महान राष्ट्रवादी चिंतक, शिक्षाविद् और भारतीय जनसंघ के संस्थापक डॉ. श्यामा प्रसाद मुखर्जी को उनकी जन्म-जयंती पर शत-शत नमन। एक सशक्त भारतवर्ष के निर्माण के लिए उन्होंने अपना जीवन समर्पित कर दिया। उनके आदर्श और सिद्धांत देश की हर पीढ़ी को प्रेरित करते रहेंगे।
— Narendra Modi (@narendramodi) July 6, 2023