பழங்குடியினத் தலைவர் கார்திக் ஓரன் நூற்றாண்டு பிறந்ததை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர், பழங்குடியின சமூகத்தின் உரிமைகளுக்காகவும் சுயமரியாதைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாபெரும் தலைவர் என்றும், பழங்குடியின கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர் என்றும் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது
பழங்குடியின சமூகத்தின் உரிமைகளுக்காகவும் சுயமரியாதைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த நாட்டின் மாபெரும் தலைவர் கார்த்திக் ஓரன் அவர்களுக்கு அவரது பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன். பழங்குடியினக் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கத் தொடர்ந்து போராடியவராக அவர் இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அவரது ஒப்பற்ற பங்களிப்பு நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்.
आदिवासी समुदाय के अधिकार और आत्मसम्मान के लिए जीवनपर्यंत समर्पित रहे देश के महान नेता कार्तिक उरांव जी को उनकी जन्म-शताब्दी पर आदरपूर्ण श्रद्धांजलि। वे जनजातीय समाज के एक मुखर प्रवक्ता थे, जो आदिवासी संस्कृति और अस्मिता की रक्षा के लिए निरंतर संघर्षरत रहे। वंचितों के कल्याण के…
— Narendra Modi (@narendramodi) October 29, 2024