டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தாய் நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:
"தமது தீவிர தேசியவாத எண்ணங்களால் பாரத அன்னையை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”
अपने प्रखर राष्ट्रवादी विचारों से मां भारती को गौरवान्वित करने वाले डॉ. श्यामा प्रसाद मुखर्जी को उनकी जन्म-जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। मातृभूमि के लिए उनका समर्पण और त्याग देशवासियों को सदैव प्रेरित करता रहेगा। pic.twitter.com/QYELTn45fb
— Narendra Modi (@narendramodi) July 6, 2024