இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இரண்டாவது நாளன்று துங்கிபாராவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
வெளிநாட்டைச் சேர்ந்த மாநிலத் தலைவர் அல்லது அரசின் தலைவர் பங்கபந்து நினைவக வளாகத்தில் மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி அங்கே ஓர் மகிழ மரக்கன்றை நட்டார்.
இந்த நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா தமது சகோதரி திருமிகு ஷேக் ரெஹானாவுடன் கலந்து கொண்டார்.
நினைவக வளாகத்தில் உள்ள விருந்தினர் குறிப்பேட்டில் பிரதமர் கையெழுத்திட்டார்.
“வங்கதேச மக்களின் உரிமைகள், அவர்களது உள்ளடக்கிய கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் அவர்களது அடையாளங்களுக்கான விடுதலை போராட்டத்தை பங்கபந்துவின் வாழ்க்கை எடுத்துரைத்தது”, என்று பிரதமர் அந்தக் குறிப்பேட்டில் எழுதினார்.