மும்பையில் இன்று நடைபெற்ற மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையிலான நினைவு அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நாளிதழின் 200-வது ஆண்டை முன்னிட்டு மும்பை சமாச்சாரின் பத்திரிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாசகர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பல்வேறு தலைமுறைகளுக்கு மும்பை சமாச்சார் குரல் கொடுத்திருப்பதாகக் கூறி, அவர் பாராட்டு தெரிவித்தார். மகாத்மா காந்தி மற்றும் சர்தார் பட்டேல் இருவரும் மும்பை சமாச்சாரை மேற்கோள் காட்டுவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த நாளிதழின் 200-ஆவது ஆண்டு, இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
மும்பை சமாச்சார் என்பது செய்தி ஊடகம் மட்டுமல்ல, ஓர் பாரம்பரியம், என்றார் அவர். மும்பை சமாச்சார் தொடங்கப்பட்டபோது அடிமைத்தனம் ஆழமாக இருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், அன்றைய காலகட்டத்தில் குஜராத்தி போன்ற இந்திய மொழியில் ஒரு பத்திரிக்கையைத் தொடங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும், அந்த யுகத்திலும் மொழியியல் இதழியலை மும்பை சமாச்சார் விரிவுபடுத்தியது என்றும் தெரிவித்தார்.
செய்தியைக் கொண்டு செல்வது, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் பணி என்று கூறிய பிரதமர், சமூகத்திலும் அரசிலும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சுட்டிக் காட்டுவதும் இவற்றின் பொறுப்பு என்றார். விமர்சனம் செய்வதற்கு ஊடகத்திற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, நேர்மறையான செய்திகளை முன்னெடுத்துச் செல்வதிலும் அதற்கு சம அளவு முக்கியத்துவம் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரானா காலகட்டத்தின் போது நாட்டு நலனுக்காக கர்மயோகிகளைப் போல பத்திரிக்கையாளர்கள் பணியாற்றியது, என்றும் நினைவில் கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்தும் முறை, தூய்மை இந்தியா உள்ளிட்ட முன்முயற்சிகளை ஊக்கப்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூக அமைப்பின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான விவாதம், ஆரோக்கியமான விமர்சனம் மற்றும் சரியான பகுத்தறிவை நாம் பின்பற்றி வருகிறோம். மிகவும் கடினமான சமூக தலைப்புகளில் வெளிப்படையான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை நாம் நடத்துகிறோம். இந்தியாவின் இந்த நடைமுறையை நாம் வலுப்படுத்த வேண்டும்”, என்று அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரானா காலகட்டத்தின் போது நாட்டு நலனுக்காக கர்மயோகிகளைப் போல பத்திரிக்கையாளர்கள் பணியாற்றியது, என்றும் நினைவில் கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்தும் முறை, தூய்மை இந்தியா உள்ளிட்ட முன்முயற்சிகளை ஊக்கப்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூக அமைப்பின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான விவாதம், ஆரோக்கியமான விமர்சனம் மற்றும் சரியான பகுத்தறிவை நாம் பின்பற்றி வருகிறோம். மிகவும் கடினமான சமூக தலைப்புகளில் வெளிப்படையான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை நாம் நடத்துகிறோம். இந்தியாவின் இந்த நடைமுறையை நாம் வலுப்படுத்த வேண்டும்”, என்று அவர் கூறினார்.
திரு ஃபர்துன்ஜீ மர்ஸ்பாஞ்ஜி என்பவரால் ஜூலை 1, 1822 அன்று மும்பை சமாச்சார், வார இதழாக அச்சாகத் தொடங்கியது. பிறகு 1832-ஆம் ஆண்டு, தினசரியாக அது மாறியது. 200 ஆண்டுகளாக இந்த பத்திரிக்கை தொடர்ந்து வெளிவருகிறது.
मुंबई समाचार ने आज़ादी के आंदोलन को भी आवाज़ दी और फिर आज़ाद भारत के 75 वर्षों को भी हर आयु के पाठकों तक पहुंचाया।
— PMO India (@PMOIndia) June 14, 2022
भाषा का माध्यम जरूर गुजराती रहा, लेकिन सरोकार राष्ट्रीय था: PM @narendramodi
मुंबई समाचार के सभी पाठकों, पत्रकारों और कर्मचारियों को इस ऐतिहासिक समाचार पत्र की दो सौवीं वर्षगांठ पर हार्दिक शुभकामनाएं!
— PMO India (@PMOIndia) June 14, 2022
इन दो सदियों में अनेक पीढ़ियों के जीवन को, उनके सरोकारों को मुंबई समाचार ने आवाज़ दी है: PM @narendramodi
विदेशियों के प्रभाव में जब ये शहर बॉम्बे हुआ, बंबई हुआ, तब भी इस अखबार ने अपना लोकल कनेक्ट नहीं छोड़ा, अपनी जड़ों से जुड़ाव नहीं तोड़ा।
— PMO India (@PMOIndia) June 14, 2022
ये तब भी सामान्य मुंबईकर का अखबार था और आज भी वही है- मुंबई समाचार: PM @narendramodi
मुंबई समाचार सिर्फ एक समाचार का माध्यम भर नहीं है, बल्कि एक धरोहर है।
— PMO India (@PMOIndia) June 14, 2022
मुंबई समाचार भारत का दर्शन है, भारत की अभिव्यक्ति है।
भारत कैसे हर झंझावात के बावजूद, अटल रहा है, उसकी झलक हमें मुंबई समाचार में भी मिलती है: PM @narendramodi
मुंबई समाचार जब शुरु हुआ था तब गुलामी का अंधेरा घना हो रहा था।
— PMO India (@PMOIndia) June 14, 2022
ऐसे कालखंड में गुजराती जैसी भारतीय भाषा में अखबार निकालना इतना आसान नहीं था।
मुंबई समाचार ने उस दौर में भाषाई पत्रकारिता को विस्तार दिया: PM @narendramodi
भारत का हज़ारों वर्षों का इतिहास हमें बहुत कुछ सिखाता है।
— PMO India (@PMOIndia) June 14, 2022
यहां जो भी आया, छोटा हो या बड़ा, कमज़ोर हो या बलवान, सभी को मां भारती ने अपनी गोद में फलने-फूलने का भरपूर अवसर दिया।
पारसी समुदाय से बेहतर इसका उदाहरण क्या हो सकता है: PM @narendramodi
आज़ादी के आंदोलन से लेकर भारत के नवनिर्माण तक पारसी बहन-भाईयों का योगदान बहुत बड़ा है।
— PMO India (@PMOIndia) June 14, 2022
संख्या से हिसाब से समुदाय देश के सबसे छोटे समुदायों में से है, एक तरह से माइक्रो-माइनॉरिटी है, लेकिन सामर्थ्य और सेवा के हिसाब से बहुत बड़ा है: PM @narendramodi
समाचार पत्रों का, मीडिया का काम समाचार पहुंचाना है, लोक शिक्षा का है, समाज और सरकार में कुछ कमियां हैं तो उनको सामने लाने का है।
— PMO India (@PMOIndia) June 14, 2022
मीडिया का जितना अधिकार आलोचना का है, उतना ही बड़ा दायित्व सकारात्मक खबरों को सामने लाने का भी है: PM @narendramodi
बीते 2 वर्षों में कोरोना काल के दौरान जिस प्रकार हमारे पत्रकार साथियों ने राष्ट्रहित में एक कर्मयोगी की तरह काम किया, उसको भी हमेशा याद किया जाएगा।
— PMO India (@PMOIndia) June 14, 2022
भारत के मीडिया के सकारात्मक योगदान से भारत को 100 साल के इस सबसे बड़े संकट से निपटने में बहुत मदद मिली: PM @narendramodi
हमने बहुत कठिन सामाजिक विषयों पर भी खुलकर स्वस्थ चर्चा की है।
— PMO India (@PMOIndia) June 14, 2022
यही भारत की परिपाटी रही है, जिसको हमें सशक्त करना है: PM @narendramodi
ये देश डिबेट और डिस्कशन्स के माध्यमों से आगे बढ़ने वाली समृद्ध परिपाटी का देश है।
— PMO India (@PMOIndia) June 14, 2022
हज़ारों वर्षों से हमने स्वस्थ बहस को, स्वस्थ आलोचना को, सही तर्क को सामाजिक व्यवस्था का हिस्सा बनाया है: PM @narendramodi