உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சஞ்சீவ் கன்னா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு. பி.ஆர். கவாய், நீதிபதி திரு. சூர்யகாந்த், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய அட்டார்னி ஜெனரல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு அனைத்து பிரமுகர்கள், பிரதிநிதிகள் மற்றும் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு உறுப்பினர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
அரசியலமைப்புச் சட்ட தினத்தைக் கொண்டாடும் வேளையில், இன்று மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் நினைவு தினமும் என்பதை மறந்துவிட முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தியதோடு இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் ஒவ்வொரு பயங்கரவாத அமைப்புக்கும் இந்தியா பொருத்தமான பதிலடி கொடுக்கும் என்று திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களை நினைவுகூர்ந்த திரு மோடி, பாபாசாகேப் அம்பேத்கரை மேற்கோள் காட்டி, "அரசியலமைப்பு என்பது வெறும் வழக்கறிஞர்களின் ஆவணம் அல்ல, அது ஒரு ஆன்மா, அது எப்போதும் யுகத்தின் உணர்வாக இருக்கும்" என்று கூறினார். இந்த உணர்வு அவசியம் என்று கூறிய திரு மோடி, நாடு, நேரம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பொருத்தமான முடிவுகளை எடுப்பதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விளக்கம் அளிக்கும் சுதந்திரத்தை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நமக்கு வழங்கியுள்ளனர் என்றார். இந்தியாவின் கனவுகளும், விருப்பங்களும் காலப்போக்கில் புதிய உச்சங்களை எட்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நன்கு அறிந்திருப்பதாகவும், சவால்களுடன் சுதந்திர இந்திய மக்களின் தேவைகளும் பரிணமிக்கும் என்றும் அவர் கூறினார்.
"நமது அரசியலமைப்பு நமது தற்போதைய மற்றும் எதிர்காலத்திற்கான வழிகாட்டி" என்று கூறிய திரு மோடி, கடந்த 75 ஆண்டுகளில் எழுந்துள்ள பல்வேறு சவால்களை சமாளிக்க அரசியலமைப்பு சரியான பாதையைக் காட்டியுள்ளது என்றும் கூறினார். இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் ஆபத்தான அவசர காலங்களைக் கூட அரசியலமைப்பு எதிர்கொண்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். நாட்டின் ஒவ்வொரு தேவையையும், எதிர்பார்ப்பையும் அரசியலமைப்பு பூர்த்தி செய்துள்ளது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில்தான் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் இன்று ஜம்மு காஷ்மீரில் கூட நடைமுறையில் உள்ளது என்றும் அவர் கூறினார். இன்று, முதல் முறையாக அரசியலமைப்பு தினம் ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியா மாற்றத்தின் முக்கியமான கட்டத்தைக் கடந்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அரசியல் சாசனம் நமக்கு வழிகாட்டும் ஒளியாக சரியான பாதையை காட்டுகிறது என்றார். பெரிய கனவுகளையும், பெரிய தீர்மானங்களையும் அடைவதே இந்தியாவின் எதிர்காலப் பாதை என்று வலியுறுத்திய திரு மோடி, இன்று ஒவ்வொரு குடிமகனின் இலக்கும் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதே என்று குறிப்பிட்டார். வளர்ந்த இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனும் தரமான வாழ்க்கையையும், கண்ணியமான வாழ்க்கையையும் பெறுவதை உறுதி செய்யும் இடம் என்று அவர் விளக்கம் அளித்தார். இது சமூக நீதியை உறுதி செய்வதற்கான சிறந்த ஊடகம் மற்றும் அரசியலமைப்பின் உணர்வு என்றும் அவர் கூறினார்.
உரையை நிறைவு செய்த திரு மோடி, நவம்பர் 26,1949 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆற்றிய உரையின் வரிகளை மேற்கோள் காட்டி, "தங்கள் சொந்த நலன்களை விட தேசத்தின் நலன்களை முன்னிறுத்தும் நேர்மையான மக்கள் குழுவைத் தவிர இந்தியாவுக்கு இன்று தேவைப்படுவது வேறொன்றுமில்லை" என்று கூறினார். தேசத்திற்கு முதலிடம் என்ற இந்த உணர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரவிருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

Click here to read full text speech
संविधान - एक जीवंत, निरंतर प्रवाहमान धारा। pic.twitter.com/zyaOfOMRXE
— PMO India (@PMOIndia) November 26, 2024
हमारा संविधान, हमारे वर्तमान और हमारे भविष्य का मार्गदर्शक है। pic.twitter.com/mN8jjDBHWp
— PMO India (@PMOIndia) November 26, 2024
आज हर देशवासी का एक ही ध्येय है- विकसित भारत का निर्माण। pic.twitter.com/TUby4sPpd9
— PMO India (@PMOIndia) November 26, 2024
भारतीयों को त्वरित न्याय मिले, इसके लिए नई न्याय संहिता लागू की गई है। pic.twitter.com/pJgtYj3XyI
— PMO India (@PMOIndia) November 26, 2024