பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 22, 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் விவாதங்கள் குறித்து தலைவர்களுக்கு விளக்கப்பட்டது.
சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் உள்பட, தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்குமாறு பிரிக்ஸ் வர்த்தகத் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
நெகிழ்தன்மை வாய்ந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய விநியோக சங்கிலிகளின் முக்கியத்துவத்தை கொவிட் எடுத்துக்காட்டியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இதற்காக பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து உலகளாவிய நலனுக்கு, குறிப்பாக உலகளாவிய தெற்கின் நலனுக்கு கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்