இகாஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்த்து முன்னேற இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக உத்தராகண்ட் மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தேவபூமியின் இகாஸ் திருவிழா பாரம்பரியம் மேலும் செழிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டதாவது:
“எனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட உத்தராகண்ட் மாநில மக்கள் அனைவருக்கும் இகாஸ் பண்டிகை நல்வாழ்த்துகள்! இன்று தில்லியில், உத்தராகண்ட் மாநிலத்தின் மக்களவை உறுப்பினர் அனில் பலுனியின் இல்லத்தில் நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளித்திட வாழ்த்துகிறேன் @anil_baluni"
"வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்த்து முன்னேற நாம் உறுதிபூண்டுள்ளோம். ஏறக்குறைய அழிந்து வரும் நாட்டுப்புற கலாச்சாரத்துடன் தொடர்புடைய இகாஸ் திருவிழா, உத்தராகண்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையின் மையமாக மீண்டும் மாறுகிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”
“உத்தராகண்டில் உள்ள எனது சகோதர சகோதரிகள் இகாஸ் பாரம்பரியத்தை உயிர்ப்பித்த விதம் மிகவும் ஊக்கமளிக்கிறது. நாடு முழுவதும் இந்தப் புனிதப் பெருவிழா மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுவதே இதற்கு நேரடிச் சான்றாகும். தேவபூமியின் இந்த பாரம்பரியம் மேலும் செழிக்கும் என்று நான் நம்புகிறேன்.”
उत्तराखंड के मेरे परिवारजनों सहित सभी देशवासियों को इगास पर्व की बहुत-बहुत बधाई! दिल्ली में आज मुझे भी उत्तराखंड से लोकसभा सांसद अनिल बलूनी जी के यहां इस त्योहार में शामिल होने का सौभाग्य मिला। मेरी कामना है कि यह पर्व हर किसी के जीवन में सुख-समृद्धि और खुशहाली लाए।@anil_baluni pic.twitter.com/KERvqmB6eA
— Narendra Modi (@narendramodi) November 11, 2024
हम विकास और विरासत को एक साथ लेकर आगे बढ़ने के लिए प्रतिबद्ध हैं। मुझे इस बात का संतोष है कि लगभग लुप्तप्राय हो चुका लोक संस्कृति से जुड़ा इगास पर्व, एक बार फिर से उत्तराखंड के मेरे परिवारजनों की आस्था का केंद्र बन रहा है।
— Narendra Modi (@narendramodi) November 11, 2024
उत्तराखंड के मेरे भाई-बहनों ने इगास की परंपरा को जिस प्रकार जीवंत किया है, वो बहुत उत्साहित करने वाला है। देशभर में इस पावन पर्व को जिस बड़े पैमाने पर मनाया जा रहा है, वो इसका प्रत्यक्ष प्रमाण है। मुझे विश्वास है कि देवभूमि की यह विरासत और फलेगी-फूलेगी।
— Narendra Modi (@narendramodi) November 11, 2024