பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். இந்த அனுபவம் இந்தியாவின் ஆன்மீக மற்றும் வரலாற்று வேர்களுடன் ஒரு அரிய மற்றும் ஆழமான தொடர்பை வழங்கியது.
வளமான கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தால் கற்பனைகளைத் தொடர்ந்து ஈர்ப்புடையதாக்கும் நகரமான, நீருக்கடியில் உள்ள துவாரகாவுக்கு , மயில் இறகுகளையும் பிரதமர் மோடி காணிக்கையாக வழங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"நீரில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீக அனுபவம். ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தியின் ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்."
To pray in the city of Dwarka, which is immersed in the waters, was a very divine experience. I felt connected to an ancient era of spiritual grandeur and timeless devotion. May Bhagwan Shri Krishna bless us all. pic.twitter.com/yUO9DJnYWo
— Narendra Modi (@narendramodi) February 25, 2024