ஈஸ்டர் திருநாளன்று கிறித்தவ மதத் தலைவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். தில்லியில் உள்ள புனித இருதய தேவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பின் சில புகைப்படங்களையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் வாயிலாக அவர் கூறியதாவது:
“ஈஸ்டர் எனும் நன்னாளான இன்று தில்லியில் உள்ள புனித இருதய தேவாலயத்திற்கு நேரில் செல்லும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த ஆன்மீக மதத் தலைவர்களையும் நான் சந்தித்துப் பேசினேன்.
ஒரு சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.”
“ஈஸ்டர் திருநாளன்று தில்லி புனித இருதய தேவாலயத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள்.
சமூகத்தில் மேலும் மகிழ்ச்சியையும், இணக்கத்தையும் இத்திருநாள் வழங்கட்டும்.”
Today, on the very special occasion of Easter, I had the opportunity to visit the Sacred Heart Cathedral in Delhi. I also met spiritual leaders from the Christian community.
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
Here are some glimpses. pic.twitter.com/7ig2Q4yHAT
Some more pictures from the Sacred Heart Cathedral, Delhi on Easter.
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
May this day further happiness and harmony in society. pic.twitter.com/970eHYmrAn