கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி.கிரெனடா பிரதமர் மேதகு திரு. டிக்கோன் மிட்செல்லை சந்தித்தார்.
கேரிகாம் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றதற்காகவும், 2-வது இந்திய-கேரிகாம் உச்சிமாநாட்டில் விவாதங்களை திறம்பட வழிநடத்தியதற்காகவும் திரு மிட்செல்லுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் காலநிலை மாற்ற நெகிழ்வுதன்மை ஆகிய துறைகளில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பெருந்தொற்றின் போது தடுப்பூசி ஆதரவுக்காக திரு மிட்செல், பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். உலகளாவிய தெற்கில் இந்தியாவின் தலைமையை அவர் பாராட்டினார்.
The Prime Minister of Grenada, Mr. Dickon Mitchell and I had a fruitful meeting. We agreed to strengthen bilateral cooperation in IT, healthcare, education and agriculture. Also appreciated his efforts in hosting the 2nd India-CARICOM Summit. pic.twitter.com/fQHCLhxg72
— Narendra Modi (@narendramodi) November 21, 2024