புனேவில் பிரபலமாக உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பில்லினியம் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கவெல் லோபின்ஸ்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, சாதகமான முதலீட்டு சூழல் மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டம் ஆகியவற்றால் உந்தப்பட்ட இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை பிரதமர் எடுத்துரைத்தார். அவரது விரிவாக்கத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்த பிரதமர், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா-போலந்து இடையே வர்த்தக ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் குறித்தும் குறிப்பிட்டார்.
எளிதாக வர்த்தகம் செய்தல் மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழல் ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை திரு. லோபின்ஸ்கிக்கு பிரதமர் வலியுறுத்தினார்.