ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் 2023 மே 23 அன்று எஸ் கிட்மேன் & கோ, ராய்ஹில்லில் உள்ள ஹேன்காக் பிராஸ்பெக்டிங் குழுமத்தின் செயல்தலைவர் திருமதி கினா ரைன்ஹார்ட் ஏஓ-வை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் முன்னெடுப்புகளை பிரதமர் எடுத்துரைத்து, சுரங்கம் மற்றும் கனிமத்துறைகளில் தொழில்நுட்பம், முதலீடு, திறன் ஆகியவற்றில் கூட்டாண்மையை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.