அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35 (ஏ) பிரிவுகளை ரத்து செய்வதற்கான நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பழமையான முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லாடாக்கில், முன்னேற்றம் மற்றும் செழிப்பின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்த ஒரு திருப்புமுனை தருணம் என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நமது நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையான தருணமாக 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்ய இந்திய நாடாளுமன்றம் முடிவு செய்தது. அதன் 5 ஆண்டுகள் நிறைவை நாம் நினைவு கூர்கிறோம். இது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்தில் தொடக்கமாகும். அரசியலமைப்பை உருவாக்கிய ஆண்கள், பெண்கள் அடங்கிய பெருமக்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுச்சியுடன் செயல்படுத்தப்பட்டது என்பதே இதன் பொருளாகும். வளர்ச்சியின் பலன்களை இழந்த பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு பாதுகாப்பு கண்ணியம், வாய்ப்புகள் ஆகியவை வழங்கப்பட்டன. அதே நேரத்தில் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீரை பாதித்த ஊழல் நடவடிக்கைகள், விலக்கி வைக்கப்பட்டதை இது உறுதி செய்கிறது.
ஜம்மு காஷ்மீர், லடாக், மக்களுக்காக, எங்களது அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றும் வருங்காலங்களில் அவர்களது விருப்பங்களை நிச்சயம் நிறைவேற்றும் என்றும் நான் உறுதியளிக்கிறேன்”.
Today we mark 5 years since the Parliament of India decided to abrogate Articles 370 and 35(A), a watershed moment in our nation's history. It was the start of a new era of progress and prosperity in Jammu and Kashmir, and Ladakh. It meant that the Constitution of India was…
— Narendra Modi (@narendramodi) August 5, 2024