மத்திய வர்த்தகத் துறைக்கான புதிய அலுவலக வளாகமான வாணிஜ்யா பவன் கட்டிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (22.06.2018) அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தக் கட்டடம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்படும் என நம்புவதாகக் கூறினார். புதிய இந்தியாவின் உணர்வுகளுக்கு உகந்ததாக இது இருக்கும் என்று நம்புவதாகச் சொன்ன அவர், பழைய நடைமுறைகளை கைவிட்டு, புதிய நடைமுறையை உருவாக்கும் முயற்சியில் இது ஒன்று என்றார். பழையக் காலத்தில் தலைநகர் புதுதில்லியிலும்கூட, முக்கியமான கட்டிடத் திட்டங்கள் நீண்டக் கால தாமதத்திற்குட்பட்டு வந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வகையில் அவர், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பாரத மையம், மத்திய தகவல் ஆணையத்திற்கான புதியக் கட்டிடம் ஆகியவற்றை குறிப்பிட்டுக் காட்டினார்.
அரசின் செயல்பாடுகளில் ஆங்காங்கே இருந்த குழிகளை அகற்றியதன் காரணமாக, இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன என்று பிரதமர் கூறினார். புதிய அலுவலகக் கட்டிடமான வாணிஜ்யா பவன், இந்தியாவின் வர்த்தகத் துறையில் உள்ள இத்தகைய குழிகளை அகற்றுவதற்கு உதவிகரமாக அமையும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார். நாட்டின் மக்கள் தொகை லாப ஈவு பற்றி குறிப்பிட்ட பிரதமர். நமது இளைஞர்களின் உள்ளக்கிடக்கைகளை நிறைவேற்றுவதற்கு நமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது என்று கூறினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பின்பற்றுவது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த புதியக் கட்டிடம் அமையவுள்ள நிலம், முன்னதாக, வழங்குதல் மற்றும் விற்பனை செய்தல் தலைமை இயக்ககத்திடம் இருந்தது என்று கூறினார். இப்போது இது அரசின் மின்னணு சந்தையினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த சந்தை மிகக் குறுகிய காலத்தில் ரூ. 8700 கோடி பரிவர்த்தனைகளை கண்டுள்ளது என்று கூறினார். அரசு மின்னணுச் சந்தையை மேலும் விரிவாக்குவதற்கு வர்த்தகத் துறை பாடுபடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஜிஎஸ்டி-யின் பலன்கள் பற்றி பிரதமர் பேசினார். மக்கள் நட்புறவிலான, மேம்பாட்டுக்கு உகந்த, முதலீடுகளுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தற்போது மிக முக்கியமான பங்காற்றி வருகிறது என்பதற்கு ஆதாரமாக பல்வேறு பெரும் பொருளாதார அளவைகளையும், இதர குறியீடுகளையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். உலக அளவில் முதல் ஐந்து நிதி-நுட்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர் கூறினார். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இன்றைய உலகில், வர்த்தகம் புரிதலில் எளிமை, வியாபாரம் புரிதலில் எளிமை ஆகியவை சார்ந்த பொருட்கள், வாழுதலில் எளிமை என்பதுடன் தொடர்பு கொண்டவை என்று அவர் கூறினார்.
ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இதில், மாநிலங்கள் தீவிரப் பங்குதாரர்களாக சேர்க்கப்படவேண்டும் என்றார். உலக ஏற்றுமதிகளில் இந்தியாவின் பங்காக தற்போதுள்ள 1.6 சதவீதத்தை குறைந்தது 3.4 சதவீதம் உயர்த்துவதற்கு வர்த்தகத் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் கூறினார். இறக்குமதிகளைக் குறைக்க உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கு முயற்சிகள் தேவை என்றும் பிரதமர் கூறினார். இந்த வகையில், மின்னணுவியல் உற்பத்தியை அவர் உதாரணமாகக் காட்டினார். உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக பிரதமர் கூறினார்.
Click here to read PM's speech