WHO DG Thanks Prime Minister Modi for his support for the centre
World leaders thank India for WHO Global Centre for Traditional Medicine
“The WHO Global Centre for Traditional Medicine is a recognition of India's contribution and potential in this field”
“India takes this partnership as a huge responsibility for serving the entire humanity”
“Jamnagar’s contributions towards wellness will get a global identity with WHO’s Global Centre for Traditional Medicine”
“By giving the slogan ‘One planet our health’ WHO has promoted the Indian vision of ‘One Earth, One Health’”
“India’s traditional medicine system is not limited to treatment. It is a holistic science of life”
 

ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.  இந்த நிகழ்ச்சி மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  உலகிலேயே முதன்முறையாக இத்தகைய மையம் குஜராத்தில் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகியவற்றின் பிரதமர்களும், மாலத்தீவுகளின் அதிபரும் அனுப்பிய வீடியோ செய்திகள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன.  மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு சர்பானந்தா சோனாவால், திரு முஞ்ச்பாரா மகேந்திர பாய், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறை சிகிச்சையோடு நிற்பதில்லை, அது வாழ்க்கையின் ஒட்டுமொத்த அறிவியலாகும் என்றார்.  சிகிச்சை மற்றும் குணப்படுத்துதலுக்கு அப்பால் ஆயுர்வேதம் என்பது சமூக ஆரோக்கியம், மனநலம், மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் ஆரோக்கியம், இரக்கம், கருணை, இனப்பெருக்கம் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயுர்வேதம் என்பது ஐந்தாவது வேதமாக கருதப்படுகிறது என்றும் திரு மோடி கூறினார்.   50 ஆண்டுகளுக்கு முன் ஜாம் நகரில் உலகின் முதலாவது ஆயுர்வேத பல்கலைக் கழகம் நிறுவப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், ஆயுர்வேதத்தில் தரமான கல்வி நிறுவனத்தையும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் கொண்டிருப்பது ஜாம் நகர் என்று கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ், இந்த மையத்திற்கு ஆதரவு அளித்ததற்காக பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்தார்.  இந்த மையம் உண்மையில் உலகளாவிய திட்டம் என்றும், உலக சுகாதார நிறுவனத்தின் 107 உறுப்பு நாடுகள் தங்களின் அரசு அலுவலகங்களை கொண்டிருப்பதன் பொருள் பாரம்பரிய மருத்துவ தலைமை கொண்ட இந்தியாவை நோக்கி உலகம் வரும் என்பதாகும் என்று அவர் கூறினார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi