ரூ.1,560 கோடி மதிப்பிலான 218 மீன்வளத் திட்டங்கள் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்
ரூ.360 கோடி செலவிலான தேசிய கப்பல் தொலைத்தொடர்பு மற்றும் ஆதரவு நடைமுறை வெளியீட்டை தொடங்கிவைத்தார்
மீனவப் பயனாளிகளுக்கு டிரான்ஸ்பாண்டர் சாதனங்கள் மற்றும் கிசான் கடன் அட்டைகளை வழங்கினார்
“மகாராஷ்டிராவிற்கு நான் வந்த உடனேயே நான் செய்தது யாதெனில், நான் விரும்பும் தெய்வமான சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலடியில் தலைவணங்கி, சில தினங்களுக்கு முன்பு சிந்துதுர்கில் நடைபெற்ற நிகழ்வுக்காக மன்னிப்பு கோரினேன்”
“சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் உத்வேகம் பெற்று, வளர்ச்சியடைந்த மகாராஷ்டிரா – வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க் வேகமாக முன்னேறிச் செல்வோம்”
“வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிப்ப்ட்டில், வளர்ச்சியடைந்த மகாராஷ்டிரா என்பது மிக முக்கியமான அங்கம்”
“வளர்ச்சிக்குத் தேவையான திறமையும், வளங்களும் மகாராஷ்டிராவிடம் உள்ளன”
“ஒட்டுமொத்த உலகமும் தற்போது வத்வான் துறைமுகத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறது”
திகி துறைமுகம், மகாராஷ்டிராவின் அடையாளமாக மாறுவதுடன், சத்ரபதி சிவாஜி மகாராஜின் கனவுகளின் சின்னமாகவும் திகழும்

மகாராஷ்டிராவின், பால்கரில் இன்று(30.08.2024) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.   ரூ.76,000 கோடி செலவிலான வத்வான் துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன்,  ரூ.1,560 கோடி மதிப்பிலான 218 மீன்வளத் திட்டங்களும் இன்று தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது  ரூ.360 கோடி செலவிலான கப்பல் தொலைத்தொடர்பு மற்றும் ஆதரவு நடைமுறையையும் திரு.மோடி தொடங்கி வைத்தார்.   அத்துடன், மீன்பிடி துறைமுகங்கள் அமைத்தல், மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் சந்தை அமைப்பது உள்ளிட்ட முக்கியமான மீன்வள கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.   மீனவப் பயனாளிகளுக்கு டிரான்ஸ்பாண்டர் சாதனங்கள் மற்றும் கிசான் கடன் அட்டைகளையும் அவர் வழங்கினார்.  

மகான் சேனாஜி மகராஜின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தி, பிரதமர் தமது உரையைத் தொடங்கினார்.  தமது இதயத்தில் எழுந்த நினைவுகளை சுட்டிக்காட்டிப் பேசிய திரு.மோடி, 2013-ல் தாம் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டபோது, முதலில் ராய்கர் கோட்டைக்கு வந்து  சத்ரபதி சிவாஜி மகாராஜின் நினைவிடத்தில் வணங்கியதை நினைவுகூர்ந்தார்.   அதே ‘பக்தி வெளிப்பாட்டுடன்’  தமது குருவால் ஆசீர்வதிக்கப்பட்டு, நாட்டிற்காக சேவையாற்றுவதற்கான புதிய பயணத்தைத் தொடங்கியதாகக் கூறினார்.   சிந்துதுர்கில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், சிவாஜி  மகாராஜ் என்பது சாதாரண பெயரல்ல, பிரசித்திபெற்ற மன்னரோ அல்லது தலைசிறந்த பிரமுகரோ அல்ல, மாறாக அவர் ஒரு தெய்வம் என்றார்.   எனவே, சிவாஜி மகாராஜின் காலடியில் தலைவணங்கி தமது எளிமையான மண்ணிப்பை சமர்ப்பித்ததாகக் கூறிய அவர், தமது வளர்ப்பு, தமது கலாச்சாரம் போனற்வை தான்,  இந்த மண்ணின் மைந்தரான வீர் சாவர்க்கரையும்,  , தேசிய உணர்வை  அவமதிக்கும் வகையிலும் நடந்து கொள்வோரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதாகத் தெரிவித்தார்.    “வீர் சாவர்க்கரை அவமதிப்பதுடன், அதற்காக வருத்தம் தெரிவிக்காதவர்களிடம் மகாராஷ்டிரா மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”  என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.   மகாராஷ்டிராவிற்கு தாம் வந்தவுடன் செய்த முதல் வேலை, தமது தெய்வமான சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் மன்னிப்புக் கோரியது தான் என்றும் திரு.மோடி குறிப்பிட்டார்.   சிவாஜி மகாராஜை வணக்கும் அனைவரிடமும், தாம் மன்னிப்புக் கோருவதாக அவர் கூறினார். 

 

இந்த மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்ட பிரதமர்,  “வளர்ச்சியடைந்த மகாராஷ்டிராவை உருவாக்க  கடந்த 10 ஆண்டுகளில் தமது அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள்,  வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முக்கியமானது” என்றும் தெரிவித்தார்.   மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் வாணிபம் பற்றிக் குறிப்பிட்ட திரு.மோடி,  இம்மாநிலம், கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதன் காரணமாக, வளர்ச்சிக்குத் தேவையான திறன் மற்றும் வளங்களைக் கொண்டிருப்பதுடன்,  எதிர்காலத்திற்குத் தேவையான ஏராளமான வாய்ப்புகளையும் பெற்றிருப்பதாகக் கூறினார்.  “வத்வான் துறைமுகம், நாட்டின் மிகப்பெரிய சரக்குப் பெட்டக துறைமுகமாக அமைவதுடன், உலகின் ஆழமான துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.  இது, மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிக்கான மையமாகத் திகழும்”  என்றும் அவர் குறிப்பிட்டார்.   வத்வான் துறைமுகத் திட்டம் செயல்படுத்தப்படுவதையொட்டி, பால்கர், மகாராஷ்டிரா மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.  

திகி துறைமுக தொழிற்சாலை பகுதியை மேம்படுத்துவதென்ற அரசின் சமீபத்திய முடிவை நினைவுகூர்ந்த பிரதமர்,   இது மகாராஷ்டிர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும் தருணம் என்றார்.   சத்ரபதி சிவாஜி மகாராஜின் ராஜ்ஜியத்தின் தலைநகரான ராய்கரில் தொழில் வளாகம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  எனவே, திகி துறைமுகம், மகாராஷ்டிராவின் அடையாளமாகவும், சத்ரபதி சிவாஜி மகாராஜின் கனவுகளின் சின்னமாகவும் திகழும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  இது, சுற்றுலா மற்றும் சூழல்-கேளிக்கை விடுதிகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்திற்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி,  மீனவர் நலனுக்காக ரூ.700கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருப்பதுடன், நாடு முழுவதும் ரூ.400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.   வத்வான் துறைமுகம், திகி துறைமுகத்தை தொழிற்சாலைப் பகுதியாக மேம்படுத்துவது மற்றும் மீன்வளம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் என, அனைத்து வளர்ச்சிப் பணிகளும்  அன்னை மகாலட்சுமி தேவி,  அன்னை ஜிவ்தானி மற்றும் பகவான் துங்கரேஸ்வர் ஆகியோரின் ஆசீர்வாதத்தால் தான் சாத்தியமானதாகவும் அவர் தெரிவித்தார்.  

 

இந்தியாவின் பொற்காலம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், கடல்சார் திறன்கள் காரணமாக,  ஒரு காலத்தில், மிகவும் வலிமையான மற்றும் வளமான நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.   “மகாராஷ்டிரா மக்கள் இந்தத் திறமைகளில் வல்லவர்கள்.  நாட்டின் வளர்ச்சிக்காக, தமது கொள்கைகள் மற்றும் வலிமையான முடிவுகள் மூலம்,  இந்தியாவின் கடல்சார் திறன்களை புதிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றவர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ”  என்று  குறிப்பிட்ட  திரு.மோடி, ஒட்டுமொத்த கிழக்கிந்திய கம்பெனியும்,  தார்யா சாரங் கன்னோஜி யகந்தி முன் நிற்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.   இந்தியாவின் வளமையான கடந்த காலத்தைப் போற்ற முந்தைய அரசுகள் தவறிவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.   “இது புதிய இந்தியா.  வரலாற்றிலிருந்து அது கற்றுக் கொண்டிருப்பதுடன், தனது திறமைகள்  மற்றும் பெருமைகளை அங்கீகரித்துள்ளது” என்று  குறிப்பிட்ட பிரதமர்,  அடிமைத்தனத்தின் அடையாளங்களை புறந்தள்ளி, கடல்சார் கட்டமைப்புகளை உருவாக்குவதில் புதிய இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.  

இந்திய கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள்,  கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வேகமடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.   துறைமுகங்கள் நவீனமயம், புதிய நீர்வழிப் பாதைகளை உருவாக்குதல், மற்றும் இந்தியாவில் கப்பல் கட்டுவதை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் அவர் உதாரணமாகக்  குறிப்பிட்டார்.   “இந்த திட்டங்களுக்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது”  என்று கூறிய  பிரதமர் மோடி, இதன் பலனாக, இந்தியாவில் உள்ள பெரும்பாலான துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் இரட்டிப்பாகி இருப்பதைக் காண முடிவதுடன், தனியார் முதலீடுகளும் அதிகரித்திருப்பதோடு, கப்பல்கள் வந்து செல்வதற்கான நேரமும் கணிசமாக குறைந்திருப்பதாகக்  கூறினார்.  இதனால் செலவுகள் குறைந்திருப்பதன் வாயிலாக தொழில்துறையினரும், வணிகர்களும் பலன் அடைந்திருப்பதுடன், இளைஞர்களுக்காக புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  “மாலுமிகளுக்கான வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது”  என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

“ஒட்டுமொத்த உலகமும் தற்போது வத்வான் துறைமுகத்தை உற்று நோக்குகிறது”  என்று குறிப்பிட்ட பிரதமர்,  20 மீட்டர் ஆழம் கொண்ட வத்வான் துறைமுகத்துடன் ஒப்பிடுகையில், பிற நாடுகளில் ஒரு சில துறைமுகங்களே அதுபோன்று உள்ளதாகவும் தெரிவித்தார்.   ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு வசதிகள் காரணமாக, அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதார சூழலையும் இந்த துறைமுகம்,மாற்றியமைக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.   தில்லி- மும்பை விரைவுச்சாலைக்கு அருகில் அமைவதாலும், பிரத்யேக மேற்கு சரக்குப் போக்குவரத்து நெடுஞ்சாலையுடனான இணைப்பு போன்றவற்றால், புதிய வணிகங்கள் மற்றும் கிடங்குகளை அமைப்பதற்கான வாய்ப்புகளையும் இது ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.  “இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் சரக்குப் போக்குவரத்து நடைபெறும் என்பதால்,  மகாராஷ்டிரா மக்கள் பெரிதும் பலனடைவார்கள்”  என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“மகாராஷ்டிராவை மேம்படுத்துவது தமது தலையாய முன்னுரிமை” என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’  மற்றும் ‘தற்சார்பு இந்தியா திட்டங்கள்’ வாயிலாக மகாராஷ்டிரா அடைந்த ஆதாயங்களையும் சுட்டிக்காட்டினார்.   இந்தியாவின் வளர்ச்சியில் மகாராஷ்டிராவின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர்,  இத்தகைய வளர்ச்சியைத் தடுக்க முயற்சிப்போரையும் அவர் குறைகூறினார்.  

முந்தைய அரசு, ஏறத்தாழ 60 ஆண்டுகளாக வத்வான் துறைமுகத் திட்டத்தை தாமதப்படுத்த முயற்சித்ததாக குற்றம்சாட்டிய பிரதமர், கடல்சார் வணிகத்திற்கு, இந்தியாவிற்கு புதிய மற்றும் நவீன துறைமுகம் தேவைப்படும் நிலையில்,  அதற்கான பணிகள் 2016 வரை தொடங்கப்படவில்லை என்றும் கூறினார்.   தேவேந்திர பட்னவிஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகுதான் இந்தத்  திட்டம் குறித்து அக்கறை செலுத்தப்பட்டு, பால்கரில் துறைமுகம் அமைக்க 2020-ல் முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.  அதன்பிறகும்கூட, மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக,  இத்திட்டம் 2.5ஆண்டுகள் தாமதம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இந்தத்  திட்டத்திற்காக மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருப்பதுடன்,  சுமார் 12 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.   எதற்காக இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் அவர் முந்தைய அரசுகளுக்கு கேள்வி எழுப்பினார். 

 

கடல் சார்ந்த வாய்ப்புகள் வரும்போது, இந்தியாவிலுள்ள மீனவ சமுதாயத்தினர் தான் மிக முக்கிய பங்குதாரர்களாக இருக்க வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தினார்.   பிரதமரின் மீன்வள மேம்பாடுடுத் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடலை  நினைவுகூர்ந்த பிரதமர், தற்போதைய அரசு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் சேவை மனப்பாண்மை காரணமாகத்தான் இத்துறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.    உலகிலேயே, மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர்,  2014-ல் 80 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 170 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.   “10 ஆண்டுகளில் மீன் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது” எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.   இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ.20ஆயிரம் கோடி அளவிற்கு மேற்கொள்ளப்பட்ட இறால்மீன் ஏற்றுமதி, தற்போது ரூ.40ஆயிரம கோடிக்கும் அதிகமாக  நடைபெறுகிறது என்றும் கூறினார்.    “இறால் மீன் ஏற்றுமதியும், தற்போது ஏறத்தாழ இரண்டு மடங்காகியுள்ளது” என்று தெரிவித்த அவர்,  நீலப்புரட்சி தான் இந்த வெற்றிக்கு உதவியதுடன்,   லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவியதாக குறிப்பிட்டார்.  

மீன்வளத்துறையில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்ய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி,   பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார்.    செயற்கைக் கோள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடு பற்றிக் குறிப்பிட்ட அவர், இன்றைய தினம் கப்பல்களுக்கான தொலைத்தொடர்பு அமைப்பு தொடங்கப்பட்டிருப்பதையும்  சுட்டிக்காட்டினார்.   இந்த அமைப்பு மீனவ சமுதாயத்திற்கு பேருதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.   மீனவர்களின் படகுகளில் 1 லட்சம் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் அரசின் திட்டத்தை எடுத்துரைத்த அவர்,   இந்த நடவடிக்க மீனவர்கள் அவர்களது குடும்பத்தினர்,  படகு உரிமையாளர்கள், மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினரை தடையின்றி தொடர்புகொள்ள உதவும் என்றும் குறிப்பிட்டார்.    அவசர காலங்களிலும், புயல் அல்லது எதிர்பாரா சம்பவங்கள் நேரும்போதும், செயற்கைக்கோள் உதவியுடன் தொடர்புகொள்ள மீனவர்களுக்கு இந்த சாதனங்கள் உதவும் என்றும்  பிரதமர் தெரிவித்தார்.    “எத்தகைய அவசர நேரத்திலும் மீனவர்களைக் காப்பாற்றுவதே அரசின் முன்னுரிமை”  என்றும் அவர் உறுதியளித்தார்.  

 

மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைதிரும்புவதற்காக,  110–க்கும் அதிகமான மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள்  அமைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.   குளிர்பதன சங்கிலி, பதப்படுத்தும் வசதிகள், படகுகள் வாங்குவதற்கு கடனுதவி மற்றும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றை சுட்டிக்காட்டிய பிரதமர், கடலோர கிராமங்களை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்துவதுடன், மீனவர் அரசின் அமைப்புகளும் வலுப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.  

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு  வாய்ப்பு அளிப்பதற்காக, தற்போதைய அரசு பணியாற்றி வருவதாக கூறிய பிரதமர்,  மாறாக, முந்தைய அரசுகள் உருவாக்கய கொள்கைகள், மீனவர்களையும், மீனவ சமுதாயத்தையும் விளிம்பு நிலைக்குத் தள்ளியதுடன், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த நாட்டில், அந்த சமுதாயத்தின் நலனுக்காகவும்  தனித்துறை ஏற்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.    “எங்களது அரசு தான் மீனவர்கள் மற்றும் பழங்குடியின சமுதாயத்திற்காக தனித் துறைகளை ஏற்படுத்தியது.  முன்பு கேட்பாரற்று விடப்பட்ட பழங்குடியினர் பகுதிகள், பிரதமரின் ஜன் மன் திட்டத்தின் மூலம் தற்போது பலனடைவதுடன், நமது பழங்குடியின மற்றும மீனவ சமுதாயத்தினர், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர் ”   என்றும் திரு.மோடி குறிப்பிட்டார்.  

 

மகாராஷ்டிர மாநில அரசின் மகளிர் சார்ந்த வளர்ச்சி அணுகுமுறையை பாராட்டிய பிரதமர்,  மகளிர்க்கு அதிகாரமளிப்பத்தில் நாட்டிற்கு புதிய பாதையை மகாராஷ்டிரா உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.   மகாராஷ்டிராவில் பல்வேறு உயர் பொறுப்புகளில் பெண்கள் சிறப்பாக செயல்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர்,  மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன் முறையாக, தலைமைச் செயலாளர் என்ற முறையில், சுஜாதா சவுனிக்,  அரசு நிர்வாகத்திற்கு வழிகாட்டி வரும் நிலையில்,  டிஜிபி ராஷ்மி சுக்லா, மாநில காவல் துறைக்கு தலைமை வகிப்பதுடன்,   மாநில வனத்துறைக்கு  ஷோமிதா பிஸ்வாஸும்,  மாநில சட்டத் துறைக்கு சுவர்ணா கேவாலேவும் தலைமை வகிப்பதையும் எடுத்துக் கூறினார்.    மாநிலத்தின் முதன்மை தலைமைக் கணக்காயராக ஜெயா பகத் பொறுப்பேற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மும்பை சுங்கத் துறைக்கு பிராச்ச ஸ்வரூப், மும்பை மெட்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அஸ்வினி பிடே ஆகியோர் பொறுப்பு வகிப்பதையும் எடுத்துரைத்தார்.    மகாராஷ்டிராவில் உயர்கல்வித் துறையில் பெண்களின் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டி யபிரதமர்,   மகாராஷ்டிரா மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் டாக்டர் மாதுரி சனித்கர்,  மகாராஷ்டிரா திறன் பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தர் டாக்டர் அபூர்வா பால்கர் ஆகியோர் பொறுப்பு வகிப்பதாகவும் தெரிவித்தார்.    “இந்தப் பெண்களின் வெற்றி,  21-ம் நூற்றாண்டின்  மகளிர் சக்த,  சமுதாயத்திற்கு புதிய வழிகாட்டத் தயாராக உள்ளதற்கு சான்று”   எஙனறு குறிப்பிட்ட திரு.மோடி, இந்த மகளிர் சஙகம. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு மிகப்பெரிய அடித்தளம் என்றும் குறிப்பிட்டார்.  

 

தமது உரையின் நிறைவாக,  ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்’ என்ற நம்பிக்கையுடன் அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.   மகாராஷ்டிர மக்களின் உதவியுடன் இந்த மாநிலம், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டும் என்றும் திரு.மோடி நம்பிக்கை தெரிவித்தார்.   

 

மகாராஷ்டிர ஆளுனர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷின்டே, துணை முதலமைச்சர்கள் திரு.தேவேந்திர பட்னவிஸ் மற்றும் திரு. அஜீத் பவார், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால்,  மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.ராஜிவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
UJALA scheme completes 10 years, saves ₹19,153 crore annually

Media Coverage

UJALA scheme completes 10 years, saves ₹19,153 crore annually
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
President of the European Council, Antonio Costa calls PM Narendra Modi
January 07, 2025
PM congratulates President Costa on assuming charge as the President of the European Council
The two leaders agree to work together to further strengthen the India-EU Strategic Partnership
Underline the need for early conclusion of a mutually beneficial India- EU FTA

Prime Minister Shri. Narendra Modi received a telephone call today from H.E. Mr. Antonio Costa, President of the European Council.

PM congratulated President Costa on his assumption of charge as the President of the European Council.

Noting the substantive progress made in India-EU Strategic Partnership over the past decade, the two leaders agreed to working closely together towards further bolstering the ties, including in the areas of trade, technology, investment, green energy and digital space.

They underlined the need for early conclusion of a mutually beneficial India- EU FTA.

The leaders looked forward to the next India-EU Summit to be held in India at a mutually convenient time.

They exchanged views on regional and global developments of mutual interest. The leaders agreed to remain in touch.