அகமதாபாத் – பூஜ் இடையே நமோ பாரத் துரித ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்
பல வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் - கிராமின் கீழ் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி
சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையை (SWITS) அறிமுகம் செய்தல்
"எமது மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்கள் அனைவருக்கும் பயனுள்ள அபிவிருத்தியைக் கொண்டு வந்துள்ளது"
"70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோருக்கும் ரூ .5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சையை வழங்குவதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆரோக்கியம் குறித்து எடுக்கப்பட்ட பெரிய முடிவு"
"நமோ பாரத் துரித ரயில் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு நிறைய வசதிகளை வழங்கப் போகிறது"
"இந்த 100 நாட்களில் வந்தே பாரத் கட்டமைப்பின் விரிவாக்கம் இதுவரை இல்லாதது"
"இது இந்தியாவுக்கான நேரம், இது இந்தியாவின் பொற்காலம், இது இந்தியாவின் அமிர்த காலம்"
"இந்தியாவுக்கு இப்போது இழக்க நேரம் இல்லை, இந்தியாவின் நம்பகத்தன்மையை அதிகரி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரயில்வே, சாலை, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நிதித் துறைகளில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.  முன்னதாக, அகமதாபாத் மற்றும் பூஜ் இடையே, இந்தியாவின் முதலாவது நமோ பாரத் விரைவு ரயிலை திரு மோடி தொடங்கி வைத்தார். நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் முதல் புனே, ஆக்ரா கன்டோன்மென்ட் முதல் வாரணாசி, துர்க் முதல் விசாகப்பட்டினம், புனே முதல் ஹூப்பள்ளி மற்றும் வாரணாசியில் இருந்து தில்லி வரையிலான 20 பெட்டிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மேலும், சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையையும் அவர் தொடங்கி வைத்தார்.

 

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், கணபதி மகோத்சவம் மற்றும் மிலாது நபி ஆகிய புனித தருணங்கள் மற்றும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் பல்வேறு பண்டிகைகளை சுட்டிக் காட்டினார். இந்த பண்டிகை நேரத்தில், ரயில்வே, சாலை மற்றும் மெட்ரோ துறைகளில் சுமார் ரூ .8,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சி திருவிழாவும் நடந்து வருவதாக திரு மோடி கூறினார். நமோ பாரத் துரித ரயில் திறப்பு விழா, குஜராத்தின் கௌரவத்தில் புதிய நட்சத்திரம் பதிக்கப்பட்டது என்று வர்ணித்த பிரதமர், இந்தியாவின் நகர்ப்புற இணைப்பில் இது ஒரு புதிய மைல்கல்லாக  அமையும் என்று கூறினார். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று தங்கள் புதிய இல்லங்களில் நுழைகின்றனர் என்று குறிப்பிட்ட திரு மோடி, ஆயிரக்கணக்கான பிற குடும்பங்களுக்கான முதல் தவணை தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார். வரவிருக்கும் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை, தந்தேராஸ், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களை இந்தக் குடும்பங்கள் தங்களது புதிய வீடுகளில் அதே உற்சாகத்துடன் கழிப்பார்கள் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். உங்களுக்கு மங்களகரமான புதுமனை புகுவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக குஜராத் மற்றும் இந்திய மக்களை, குறிப்பாக பெண்களை அவர் பாராட்டினார்.

பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையே, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் வெள்ளம் ஏற்பட்டு வருவதாக திரு மோடி வேதனை தெரிவித்தார். குஜராத்தின் மூலை முடுக்குகளில் குறுகிய காலத்தில் இதுபோன்ற இடைவிடாத மழை பெய்தது இதுவே முதல் முறை என்று அவர் மேலும் கூறினார். வெள்ளத்தால் உயிரிழந்த மக்களின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு மற்றும் மறுவாழ்வை உறுதி செய்ய மத்திய-மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் உறுதியளித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

"மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் குஜராத்திற்கு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் இது" என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, குஜராத் தாம் பிறந்த இடம் என்றும், அங்கு தாம் அனைத்து வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொண்டதாகவும் எடுத்துரைத்தார். குஜராத் மக்கள் தன்மீது அன்பைப் பொழிந்ததாகவும், வீடு திரும்பும் ஒரு மகன் புதிய சக்தியுடனும், உற்சாகத்துடனும் புத்துயிர் பெறுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தன்னை ஆசீர்வதிக்க மக்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் திரண்டிருப்பது தனது நல்ல அதிர்ஷ்டம் என்று அவர் கூறினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் குஜராத் மாநிலத்திற்கு வருகை தர வேண்டும் என்ற குஜராத் மக்களின் விருப்பத்தை பிரதமர் தெரிவித்தார். "அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பணியாற்ற அதே அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்ததன் மூலம், இந்திய மக்கள் வரலாற்றை உருவாக்கியிருப்பது இயற்கையானது" என்று கூறிய பிரதமர், இது இந்திய ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்று குறிப்பிட்டார். "தேசத்தின் தீர்மானத்தை முதலில் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்து, அதே குஜராத் மக்கள்தான் தம்மை தில்லிக்கு அனுப்பி வைத்தனர்" என்று அவர் மேலும் கூறினார். அரசின் முதல் 100 நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று, மக்களவைத் தேர்தலின் போது இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி, எந்த முயற்சியையும் தாம் விட்டுவைக்கவில்லை என்றும் கூறினார். முதல் 100 நாட்களை மக்கள் நலன் மற்றும் தேச நலனுக்கான கொள்கைகளை வகுப்பதிலும், முடிவுகளை எடுப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாக அவர் கூறினார்.

 

கடந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்று தேர்தலின் போது நாட்டுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்த திசையில் பணிகள் வேகமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஜராத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், உறுதியான வீடுகளைப் பெற்றிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஜார்க்கண்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் புதிய பக்கா வீடுகளின் பயனாளிகள் என்று அவர் கூறினார். கிராமங்களாக இருந்தாலும் சரி, நகரங்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சிறந்த சுற்றுச்சூழலை வழங்குவதில் தமது அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக திரு மோடி குறிப்பிட்டார். நகர்ப்புற நடுத்தர வகுப்பினரின் வீடுகளுக்கான நிதி உதவியாக இருக்கட்டும், தொழிலாளர்களுக்கு நியாயமான வாடகையில் நல்ல வீடுகளை வழங்கும் இயக்கமாக இருக்கட்டும், அல்லது தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு வீடுகள் கட்டுவதாக இருக்கட்டும் அல்லது பணிபுரியும் பெண்களுக்காக, நாட்டில் புதிய விடுதிகளைக் கட்டுவதாகட்டும், அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவிடுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினரின் ஆரோக்கியம் தொடர்பாக எடுக்கப்பட்ட பெரிய முடிவை நினைவுகூர்ந்த பிரதமர், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று தாம் அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்தார். நடுத்தர வர்க்கத்தின் மகன்கள் மற்றும் மகள்கள் தங்கள் பெற்றோரின் சிகிச்சை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.

 

கடந்த 100 நாட்களில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவுகள் குறித்து கவனத்தை ஈர்த்த பிரதமர், 4 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பிரதமரின் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார். இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால், நிறுவனங்களில் முதல் வேலைக்கான முதல் சம்பளத்தையும் அரசாங்கம் கொடுக்கும் என்று அவர் கூறினார். முத்ரா கடனுக்கான வரம்பை ரூ.1௦ லட்சத்திலிருந்து ரூ.2௦ லட்சமாக உயர்த்துவதையும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் முன்முயற்சிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். கடந்த சில ஆண்டுகளில் அவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளதாகவும், அரசின் முதல் நூறு நாட்களில் நாட்டில் 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனநிறைவு தெரிவித்தார். எண்ணெய் வித்து விவசாயிகளின் நலனுக்காக அரசாங்கம் சமீபத்தில் எடுத்த முடிவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் அவர்கள் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலையைப் பெறுவார்கள். சோயாபீன் மற்றும் சூரியகாந்தி போன்ற பயிர்களை வளர்க்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் 'தற்சார்பு' ஆக மாறுவதற்கான வேகத்தை அளிக்கவும், வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பாஸ்மதி அரிசி மற்றும் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை அரசாங்கம் நீக்கியதால், வெளிநாடுகளில் இந்திய அரிசி மற்றும் வெங்காயத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.

 

கடந்த 100 நாட்களில் ரயில், சாலை, துறைமுகம், விமான நிலையம் மற்றும் மெட்ரோ தொடர்பான டஜன் கணக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக திரு மோடி வலியுறுத்தினார். இன்றைய நிகழ்ச்சியிலும், அதன் ஒரு காட்சியைக் காண முடிந்தது என்று அவர் கூறினார். குஜராத்தில் இன்று இணைப்புத் திட்டம் தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்த நிகழ்வுக்கு முன்னர் கிப்ட் சிட்டி நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம் செய்ததாக அவர் கூறினார். மெட்ரோ பயணத்தின் போது பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும், அகமதாபாத் மெட்ரோ விரிவாக்கம் குறித்து அனைவரும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 100 நாட்களுக்குள், நாடு முழுவதும் பல நகரங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

குஜராத்திற்கு இன்று சிறப்பு வாய்ந்த நாள் என்று குறிப்பிட்ட திரு மோடி, நமோ பாரத் விரைவு ரயில் அகமதாபாத் மற்றும் பூஜ் இடையே தனது சேவையைத் தொடங்கியுள்ளதை எடுத்துரைத்தார். நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பயணம் செய்யும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு நமோ பாரத் துரித ரயில் மிகவும் வசதியாக இருக்கும் என்றும், வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். வரும் நாட்களில் நமோ பாரத் துரித ரயில் திட்டம் நாட்டின் பல நகரங்களை இணைப்பதன் மூலம் பலருக்கும் பயனளிக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

 

"இந்த 100 நாட்களில் வந்தே பாரத் கட்டமைப்பின் விரிவாக்கம் இதுவரை இல்லாதது" என்று குறிப்பிட்ட பிரதமர், 15-க்கும் மேற்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் வழித்தடங்களை எடுத்துரைத்தார். ஜார்க்கண்ட் மற்றும் நாக்பூர்-செகந்திராபாத், கோலாப்பூர்-புனே, ஆக்ரா கன்டோன்மென்ட்-பனாரஸ், துர்க்-விசாகப்பட்டினம், புனே-ஹூப்ளி ஆகிய இடங்களிலிருந்து வரும் வந்தே பாரத் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்ததாக அவர் குறிப்பிட்டார். தில்லி – வாரணாசி வந்தே பாரத் ரயிலில் தற்போது 20 பெட்டிகள் உள்ளன என்றும் அவர் பேசினார். நாட்டில் 125-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சிறந்த பயணத்தை மேற்கொள்ள உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

நேரத்தின் மதிப்பை குஜராத் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்த பிரதமர், தற்போதைய காலகட்டம் இந்தியாவின் பொற்காலம் அல்லது அமிர்த காலம் என்று பாராட்டினார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று மக்களை வலியுறுத்திய அவர், இதில் குஜராத்திற்கு மிகப் பெரிய பங்கு உள்ளது என்றார். குஜராத் இன்று மிகப் பெரிய உற்பத்தி மையமாக மாறி வருவது குறித்தும், இந்தியாவில் மிகவும் நன்றாக இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக குஜராத் திகழ்வது குறித்தும் திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். நம்பிக்கை தெரிவித்த திரு மோடி, குஜராத் இந்தியாவுக்கு, அதன் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போக்குவரத்து விமானமான சி-295-ஐ வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அறிவித்தார். செமிகண்டக்டர் இயக்கத்தில் குஜராத் முன்னிலை வகித்தது முன்னெப்போதும் இல்லாதது என்று அவர் பாராட்டினார். இன்று குஜராத்தில் பெட்ரோலியம், தடயவியல் முதல் நல்வாழ்வு வரை பல பல்கலைக்கழகங்கள் உள்ளன என்றும், ஒவ்வொரு நவீன பாடத்தையும் படிக்க குஜராத்தில் சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை குஜராத்தில் திறந்து வருவதாகவும் அவர் கூறினார். கலாச்சாரம் முதல் விவசாயம் வரை, குஜராத் உலகெங்கும் பரவியுள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். குஜராத் தற்போது வெளிநாடுகளுக்கு பயிர்களையும், தானியங்களையும் ஏற்றுமதி செய்வது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும், குஜராத் மக்களின் விடாப்பிடியான மற்றும் கடின உழைப்பு இயல்பால் தான் இவை அனைத்தும் சாத்தியமானது என்றும் அவர் கூறினார்.

 

மாநிலத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தலைமுறை கடந்துவிட்டது என்று கூறிய பிரதமர், மாநிலத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து செங்கோட்டையில் இருந்து தாம் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்த பிரதமர், ஏற்றுமதி செய்யப்படாத பொருட்கள் தரம் குறைந்தவை என்ற மனப்பான்மையிலிருந்து மக்கள் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உயர்தர உற்பத்தி பொருட்களின் கலங்கரை விளக்கமாக குஜராத் திகழ வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.

புதிய தீர்மானங்களுடன் இந்தியா பணியாற்றும் விதம் உலகில் ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறது என்று பிரதமர் கூறினார். பல நாடுகளில் பல பெரிய மேடைகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது, இந்தியாவுக்கு இவ்வளவு மரியாதை  கிடைப்பதைக் காணலாம் என்று திரு மோடி கூறினார் "உலகில் உள்ள அனைவரும் இந்தியாவையும் இந்தியர்களையும் திறந்த கரங்களுடன் வரவேற்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நெருக்கடி காலங்களில் தீர்வுகளுக்காக உலக மக்கள் இந்தியாவை எதிர்பார்க்கிறார்கள்" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக, நிலையான அரசை அமைத்துள்ளதால் உலகின் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். திறன் வாய்ந்த இளைஞர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த நம்பிக்கையின் ஊக்கத்தின் நேரடி பயனாளிகள் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் என்று அவர் கூறினார். நம்பிக்கை அதிகரிப்பு, ஏற்றுமதியை அதிகரிப்பதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் மேலும் கூறினார்.

ஒரு புறம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் நாட்டின் வலிமையை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவதன் மூலம், முழு உலகிலும் இந்தியாவின் விளம்பரத் தூதராக மாற விரும்புகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதுபோன்ற நபர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக தாக்குதல் நடத்துகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து சர்தார் படேல் எவ்வாறு இந்தியாவை ஒருங்கிணைத்தார் என்பதை திரு மோடி நினைவு கூர்ந்தார். அதிகாரப் பசி கொண்ட மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். குஜராத் மக்கள் இதுபோன்ற பிளவுபடுத்தும் சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திரு மோடி எச்சரித்தார்.

 

இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், இதுபோன்ற எதிர்மறை சக்திகளை தைரியமாக எதிர்கொள்ளும் திறன் அதற்கு உள்ளது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். "இந்தியாவுக்கு இனி இழக்க நேரமில்லை. இந்தியாவின் மீதான இந்தியாவின் நம்பகத்தன்மையை நாம் அதிகரிக்க வேண்டும், ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியமான வாழ்க்கையை வழங்க வேண்டும்" என்று கூறிய பிரதமர், இதிலும் குஜராத் ஒரு தலைமையாக உருவெடுக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். நமது ஒவ்வொரு தீர்மானமும் நம் அனைவரின் முயற்சியால் நிறைவேறும். "அனைவரும் இணைவோம்" என்று திரு மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

சமகியாலி – காந்திதாம் மற்றும் காந்திதாம் – ஆதிப்பூர் ரயில் பாதைகளை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், அகமதாபாத்தில் உள்ள ஏஎம்சி சாலைகளை மேம்படுத்துதல், பக்ரோல், ஹதிஜான், ரமோல் மற்றும் பஞ்சர்போல் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

30 மெகாவாட் சூரிய மின்சக்தி அமைப்பு, கட்ச் பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையத்தில் 35 மெகாவாட் பிஇஎஸ்எஸ் சூரிய ஒளி மின் திட்டம் மற்றும் மோர்பி மற்றும் ராஜ்கோட்டில் 220 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

நிதிச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம்-ஊரகத்தின் கீழ் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர், இந்த வீடுகளுக்கான முதல் தவணையை விடுவித்தார். PMAY திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதையும் அவர் தொடங்கி வைத்தார் மற்றும் PMAY-ன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பிரிவுகளின் கீழ் முடிக்கப்பட்ட வீடுகளை மாநில பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.

மேலும், அகமதாபாத் பூஜ் இடையே இந்தியாவின் முதலாவது நமோ பாரத் விரைவு ரயில், நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் முதல் புனே, ஆக்ரா கன்டோன்மென்ட் முதல் வாரணாசி, துர்க் முதல் விசாகப்பட்டினம், புனே முதல் ஹூப்பள்ளி மற்றும் வாரணாசியில் இருந்து தில்லி வரையிலான 20 பெட்டிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Government announces major projects to boost capacity at Kandla Port with Rs 57,000-crore investment

Media Coverage

Government announces major projects to boost capacity at Kandla Port with Rs 57,000-crore investment
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
President of the European Council, Antonio Costa calls PM Narendra Modi
January 07, 2025
PM congratulates President Costa on assuming charge as the President of the European Council
The two leaders agree to work together to further strengthen the India-EU Strategic Partnership
Underline the need for early conclusion of a mutually beneficial India- EU FTA

Prime Minister Shri. Narendra Modi received a telephone call today from H.E. Mr. Antonio Costa, President of the European Council.

PM congratulated President Costa on his assumption of charge as the President of the European Council.

Noting the substantive progress made in India-EU Strategic Partnership over the past decade, the two leaders agreed to working closely together towards further bolstering the ties, including in the areas of trade, technology, investment, green energy and digital space.

They underlined the need for early conclusion of a mutually beneficial India- EU FTA.

The leaders looked forward to the next India-EU Summit to be held in India at a mutually convenient time.

They exchanged views on regional and global developments of mutual interest. The leaders agreed to remain in touch.