குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தப் பண்டிகைகள் கலாச்சாரத்தை கொண்டாடும் அதே வேளையில், வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றார். குஜராத் முழுவதும் பல்வேறு முக்கிய திட்டங்கள் பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார். இந்திய விமானப்படைக்கு விமானங்களை தயாரிக்க அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தொழிற்சாலையை வதோதராவில் திறந்து வைத்தை அவர் சுட்டிக்காட்டினார். அம்ரேலியில் பாரத மாதா சரோவர் தொடங்கி வைக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், குடிநீர், சாலைகள் மற்றும் ரயில்வே தொடர்பான பல்வேறு பெரிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும், பிராந்திய வளர்ச்சியை விரைவுபடுத்தும், உள்ளூர் விவசாயிகளை வளப்படுத்தும் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொருவரையும் அவர் பாராட்டினார்.
சவுராஷ்டிராவில் உள்ள அம்ரேலி பூமி இந்தியாவுக்கு பல ரத்தினங்களை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், வரலாறு, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் அரசியல் ரீதியாக அனைத்து வகையிலும் அம்ரேலி ஒளிமயமான கடந்த காலத்தை கொண்டுள்ளது என்றார். ஸ்ரீ யோகிஜி மகாராஜ் மற்றும் போஜா பகத், நாட்டுப்புற பாடகரும் கவிஞருமான துலபய்யா காக், கலாபி போன்ற கவிஞர்கள், உலகப் புகழ்பெற்ற மந்திரவாதி கே.லால் மற்றும் நவீன கவிதைகளின் தலைவர் ரமேஷ் பரேக் ஆகியோரின் கர்மபூமி அம்ரேலி என்று அவர் மேலும் கூறினார். குஜராத்தின் முதல் முதலமைச்சர் திரு ஜீவராஜ் மேத்தாவையும் அம்ரேலி பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். அம்ரேலியின் குழந்தைகள் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியதன் மூலம் வர்த்தக உலகில் பெரும் பெயரைப் பெற்றுள்ளனர் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வதில் குஜராத் மாநிலம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது எடுத்துக்காட்டாக திகழ்வதாகக் கூறினார். ஒவ்வொரு மூலைக்கும் தண்ணீர் வழங்குவதற்கான மாநிலத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்றைய திட்டங்கள் இப்பகுதியில் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு மேலும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். அம்ரேலி, போட்டாட், ஜுனாகத், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் போன்ற மாவட்டங்களைப் பாதிக்கும் சுமார் 1,300 கிராமங்கள் மற்றும் 35-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு நவ்டா-சாவந்த் மொத்த குழாய் திட்டம் பயனளிக்கும் என்று திரு மோடி தெரிவித்தார். பஸ்வி குழும சவுராஷ்டிரா மண்டல குடிநீர் விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், தலஜா, மஹுவா மற்றும் பாலிதானா தாலுகாக்களின் தேவைகளை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும் என்றார். "இந்த திட்டம் நிறைவடைந்ததும், சுமார் 100 கிராமங்கள் நேரடியாக பயனடையும்" என்று அவர் தெரிவித்தார்.
இன்றைய நீர் திட்டங்கள் அரசு மற்றும் சமுதாயத்தின் கூட்டு சக்தியாகவும், பொதுமக்களின் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுவதாக பிரதமர் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 அமிர்த நீர்நிலைகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை நீர் பாதுகாப்பு முயற்சிகளுடன் இணைப்பதன் வெற்றியை அவர் எடுத்துரைத்தார். கிராமங்களில் கட்டப்பட்டுள்ள 60,000 அமிர்த நீர்நிலைகள் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வதற்கு திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். திரு. சி.ஆர். பாட்டீலின் தலைமையின் கீழ் வலுப்பெற்று வரும் மழையைப் பிடிப்போம் இயக்கத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இந்த இயக்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், சமுதாய பங்களிப்புடன் ஆயிரக்கணக்கான நீர் செறிவூட்டல் கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அம்ரேலி இயற்கை விவசாயத்தின் முக்கிய மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் நாட்டின் முதல் இயற்கை விவசாய பல்கலைக்கழகம் ஹலோலில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ், குஜராத்தின் முதலாவது இயற்கை வேளாண் கல்லூரியை அம்ரேலி பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். கால்நடை வளர்ப்பில் மேலும் மேலும் அதிகமான விவசாயிகள் ஈடுபடுவதையும், இயற்கை விவசாயத்திலிருந்து பயனடைவதையும் உறுதி செய்வதே இந்த முயற்சி என்று திரு மோடி கூறினார். சமீபத்திய ஆண்டுகளில் அம்ரேலியின் பால் பண்ணைத் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்பதை எடுத்துரைத்த திரு மோடி, அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளால் மட்டுமே இது சாத்தியமானது என்றார். 2007-ம் ஆண்டு 25 கிராமங்களைச் சேர்ந்த அரசுக் குழுக்கள் இணைந்து அமர் பால் பண்ணை தொடங்கியதை நினைவுகூர்ந்த திரு மோடி, "இன்று 700-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அமர் பால்பண்ணையுடன் இணைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் சுமார் 1.25 லட்சம் லிட்டர் பால் சேகரிக்கப்படுகிறது" என்றார்.
மின்சாரக் கட்டணங்களை ஒழிப்பதற்கும், மின்சாரத்திலிருந்து வருமானத்தை ஈட்டுவதற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சேமிப்பதை உறுதி செய்யும் பிரதமரின் சூர்யசக்தி வீடு திட்டம் பற்றி பேசிய பிரதமர், இது செயல்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே குஜராத் முழுவதும் கூரைகளில் சுமார் 200,000 சூரிய ஒளி தகடுகள் நிறுவப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். அம்ரேலி மாவட்டம் சூரிய சக்தியில் வேகமாக முன்னேறி வருவதை அவர் எடுத்துரைத்தார், இதற்கு உதாரணமாக துதாலா கிராமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கிராமம் மாதத்திற்கு சுமார் 75,000 ரூபாய் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்துகிறது, ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.4,000 சேமிப்பு கிடைக்கிறது என்று பிரதமர் கூறினார்."துதாலா விரைவில் அம்ரேலியின் முதல் சூரிய கிராமமாக மாறும்" என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத்தின் நீண்ட கடற்கரை பற்றி குறிப்பிட்ட திரு மோடி, பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் வளர்ச்சியும் அரசின் முன்னுரிமை என்று குறிப்பிட்டார். எனவே, மீன்பிடி மற்றும் துறைமுகங்கள் தொடர்பான பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் புதுப்பிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்ததை குறிப்பிட்ட பிரதமர், இந்த நடவடிக்கை இந்தியாவின் புகழ்பெற்ற கடல்சார் பாரம்பரியத்தை நாட்டிற்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்தி ஊக்குவிக்கும் என்று கூறினார்.
வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தை உருவாக்க ஏழைகளுக்கு உறுதியான வீடுகள், மின்சாரம், சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், எரிவாயு குழாய்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு தனது மூன்றாவது பதவிக்காலத்தில் விரைவாக செயல்பட்டு வருவதாக அவர் உறுதிப்படுத்தினார். சவுராஷ்டிராவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு இணைப்பின் பலன்கள் தொழில்துறை வளர்ச்சியை கணிசமாக ஊக்குவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜாம்நகரில் இருந்து அமிர்தசரஸ்-பட்டிண்டா வரையிலான பொருளாதார வழித்தடம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், "இந்தத் திட்டம் குஜராத் முதல் பஞ்சாப் வரையிலான அனைத்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும். இன்றைய திறப்பு விழாக்கள் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை ஜாம்நகர் மற்றும் மோர்பி போன்ற முக்கிய தொழில்துறை மையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, சோம்நாத் மற்றும் துவாரகாவுக்கு எளிதான யாத்திரைகளை எளிதாக்கும். கட்ச் பகுதியில் ரயில் இணைப்பு விரிவாக்கம், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் சுற்றுலா மற்றும் தொழில்மயமாக்கலை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
"இந்தியா வேகமாக வளர்ந்து வருவதால், உலகில் இந்தியாவின் பெருமையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்று பிரதமர் கூறினார். இன்று உலகம் இந்தியாவை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்றும், இந்தியாவின் ஆற்றலை அங்கீகரித்து, இந்தியா சொல்வதை தீவிரமாக கேட்கிறது என்றும் அவர் கூறினார். இந்த நாட்களில் இந்தியாவின் வாய்ப்புகள் குறித்து அனைவரும் விவாதித்து வருவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, இதில் குஜராத்துக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது என்று தெரிவித்தார். ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இந்தியாவின் வளத்தை குஜராத் உலகிற்கு காட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு சென்றதைக் குறிப்பிட்ட திரு மோடி, ஒவ்வொருவரும் இந்தியாவுடன் இணைந்து முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். ஜெர்மனி அதிபரின் அண்மைப் பயணம் மற்றும் அவருடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானதையும் பிரதமர் குறிப்பிட்டார். ஜெர்மனி தற்போது வருடாந்திர விசா ஒதுக்கீட்டை 20 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரமாக உயர்த்தியுள்ளது, இது இந்திய இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார். ஸ்பெயின் அதிபரின் குஜராத் வருகை குறித்தும், வதோதராவில் போக்குவரத்து விமான உற்பத்தித் தொழிற்சாலையில் வடிவில் ஸ்பெயின் முதலீடு செய்திருப்பதையும் திரு மோடி எடுத்துரைத்தார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்களுக்கு இது ஊக்கமளிப்பதுடன், விமான உற்பத்திக்கான முழுமையான அமைப்பை உருவாக்கி, லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
"நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சியின் மூலம் நாடு வளர்ச்சி அடைகிறது என்று கூறி வந்தேன். வளர்ந்த குஜராத் வளர்ந்த இந்தியாவுக்கான பாதையை வலுப்படுத்தும்" என்று கூறிய அவர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொருவரையும் பாராட்டி தமது உரையை நிறைவு செய்தார்.
"நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சியின் மூலம் நாடு வளர்ச்சி அடைகிறது என்று கூறி வந்தேன். வளர்ந்த குஜராத் வளர்ந்த இந்தியாவுக்கான பாதையை வலுப்படுத்தும்" என்று கூறிய அவர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொருவரையும் பாராட்டி தமது உரையை நிறைவு செய்தார்.
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.