Quoteதிருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனைய கட்டடத்தைத் திறந்துவைத்தார்
Quoteதமிழ்நாட்டில் ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் கப்பல் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteகல்பாக்கம் ஐ.ஜி.சி.ஏ.ஆரில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விரைவு உலை எரிபொருள் மறுசுழற்சி ஆலையை (டி.எஃப்.ஆர்.பி) நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteகாமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குகப்பல் நிறுத்துமிடம் -2ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி/ இறக்குமதி முனையம்-2 மற்றும் மூலதன தூர்வாரும் கட்டம்-5) நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Quoteதிரு.விஜயகாந்த் மற்றும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்
Quoteஅண்மையில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்
Quote"திருச்சிராப்பள்ளியில் தொடங்கப்படும் புதிய விமான நிலைய முனையக் கட்டடம் மற்றும் பிற இணைப்புத் திட்டங்கள் இப்பகுதியின் பொருளாதார நிலையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்"
Quote"அடுத்த 25 ஆண்டுகள், இந்தியாவை பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாணங்களை உள்ளடக்கிய வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான
Quoteஇந்தத் திட்டங்களில் பல சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
Quoteதிருச்சி விமான நிலையம் அதன் உள்கட்டமைப்புடன் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் என்று அவர் திருப்தி தெரிவித்தார்.
Quoteஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம் மற்றும் வேலூர் போன்ற முக்கிய நம்பிக்கை மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் வகையில் இந்த புதிய சாலைத் திட்டங்கள் அமையும்.
Quote. மேலும், அணு உலை மற்றும் எரிவாயு குழாய்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்தும் அவர் பேசினார்.
Quoteஇந்த நம்பிக்கை வளர்ச்சியடைந்த பாரதத்தின் சக்தியாக மாறும் என்று கூறி, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
Quoteஇந்தச் சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களை இணைக்கும், உலக பாரம்பரிய தளமான மாமல்லபுரத்திற்கு சாலை இணைப்பை மேம்படுத்தும் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் துறை போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

 

அனைவருக்கும் பயனுள்ள மற்றும் வளமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், 2024-ம் ஆண்டில் தனது முதல் பொது நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ரூ.20,000 கோடிக்கும் அதிகமான இன்றைய திட்டங்கள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் என்று கூறிய அவர், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி மற்றும் பெட்ரோலிய குழாய்கள் போன்ற துறைகளின் திட்டங்களுக்காக மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தத் திட்டங்களில் பல சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

 

|

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த மூன்று வாரங்களாக பெய்த கன மழையால் பலர் உயிர் இழந்ததையும், கணிசமான சொத்து இழப்புகளையும் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,  உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் கூறினார். தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்றார் அவர்.

 

சமீபத்தில் மறைந்த திரு.விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, "அவர் சினிமா துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் ஒரு 'கேப்டன்' என்று கூறினார். தனது படைப்புகள் மற்றும் திரைப்படங்களின் மூலம் மக்களின் இதயங்களை வென்று, எல்லாவற்றிற்கும் மேலாக தேச நலனை அவர் கொண்டிருந்தார் என அவர் கூறினார். மேலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த அவர், மறைந்த அவரது ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

அடுத்த 25 ஆண்டுகளுக்கு விடுதலையின் அமிர்தப் பெருவிழா, இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமர் மீண்டும் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த பாரதம் என்று வரும்போது பொருளாதார மற்றும் கலாச்சார அம்சங்களைப் பற்றி அவர் கூறினார். ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவின் செழிப்பு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தொன்மையான தமிழ் மொழியின் தாயகம் தமிழ்நாடு, அது பண்பாட்டு பாரம்பரியத்தின் பொக்கிஷம் என்று கூறிய பிரதமர், அற்புதமான இலக்கியங்களை உருவாக்கிய திருவள்ளுவர் மற்றும் சுப்பிரமணிய பாரதி ஆகியோரை நினைவுகூர்ந்தார். சி.வி.ராமன் போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள் மற்றும் பிற விஞ்ஞானிகளின் தாயகமாக தமிழகம் திகழ்வதாகவும், தாம் மாநிலத்திற்கு வரும் போதெல்லாம் தமக்கு அது புதிய ஆற்றலை ஊட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

|

திருச்சிராப்பள்ளியின் வளமான பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் நாயக்கர் வம்சங்களின் நல்லாட்சி மாதிரிகளின் மிச்சங்களை இங்கே காண்பதாகக் கூறினார். தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி குறிப்பிடுவதாக அவர் கூறினார். "நாட்டின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ் கலாச்சார உத்வேகத்தின் பங்களிப்பு தொடர்ந்து விரிவடைவதாக நான் நம்புகிறேன்", என்று அவர் கூறினார். புதிய நாடாளுமன்றம், காசித் தமிழ், காசி சௌராஷ்டிர சங்கமம், புனிதமான செங்கோல் நிறுவப்பட்ட முயற்சிகள் நாடு முழுவதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வழிவகுத்த முயற்சிகள் என்று அவர்  சுட்டிக்காட்டினார்.

 

கடந்த 10 ஆண்டுகளில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஏழைகளுக்கான வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற துறைகளில் இந்தியாவின் மிகப்பெரிய முதலீடுகள் குறித்து பிரதமர் தெரிவித்தார். உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் இந்தியா இடம்பிடித்துள்ளது, இது உலகிற்கு ஒரு நம்பிக்கை ஒளியாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகெங்கிலும் இருந்து இந்தியாவிற்கு வரும் பெரும் முதலீடுகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மேக் இன் இந்தியாவின் முதன்மை வணிகத் தூதுவராக தமிழகம் மாறியுள்ளதால் அதன் நேரடி நன்மைகளை தமிழ்நாடும் அதன் மக்களும் பெற்று வருவதாகக் கூறினார்.

 

|

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியில் பிரதிபலிக்கும் என்ற அரசின் அணுகுமுறையைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். மத்திய அரசின் 40-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் கடந்த ஓராண்டில் 400-க்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளனர். "தமிழ்நாட்டின் முன்னேற்றத்தால் இந்தியா முன்னேறும்" என்று குறிப்பிட்ட திரு. மோடி, இணைப்பு என்பது தொழில்களுக்கு ஊக்கமளிக்கும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வளர்ச்சிக்கான ஊடகம் என்று குறிப்பிட்டார். இன்றைய திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைப் பற்றிக் குறிப்பிட்டார், இது திறனை மூன்று மடங்கு அதிகரிக்கும். கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற பகுதிகளுடனான இணைப்பை வலுப்படுத்தும். புதிய முனையக் கட்டிடத்தின் திறப்பு விழா முதலீடுகள், வணிகங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலாவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். உயர்த்தப்பட்ட சாலை மூலம் விமான நிலையத்தை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதை அதிகரித்ததையும் அவர் குறிப்பிட்டார். திருச்சி விமான நிலையம் அதன் உள்கட்டமைப்புடன் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் என்று அவர் திருப்தி தெரிவித்தார்.

 

ஐந்து புதிய ரயில்வே திட்டங்களைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவை தொழில் மற்றும் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று கூறினார். ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம் மற்றும் வேலூர் போன்ற முக்கிய நம்பிக்கை மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் வகையில் இந்த புதிய சாலைத் திட்டங்கள் அமையும்.

 

|

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசிய பிரதமர், கடலோரப் பகுதிகளையும் மீனவர்களின் வாழ்க்கையையும் மாற்றுவதற்கான திட்டங்களைக் குறிப்பிட்டார். மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் மற்றும் பட்ஜெட், மீனவர்களுக்கான வேளாண் கடன் அட்டை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான படகு நவீனமயமாக்கலுக்கான உதவி மற்றும் பிரதமர் மத்ஸ்ய சம்படா திட்டம்  ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.

 

சாகர்மாலா திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் உள்ள துறைமுகங்கள் சிறந்த சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். துறைமுகத்தின் திறன் மற்றும் கப்பல்களின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார், ஏனெனில் காமராஜர் துறைமுகத்தின் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்கு நிறுத்துமிடம்-2 திறப்பு விழா, தமிழ்நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை, குறிப்பாக ஆட்டோமொபைல் துறையை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அணு உலை மற்றும் எரிவாயு குழாய்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்தும் அவர் பேசினார்.

 

தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த வரலாறு காணாத செலவு குறித்து பிரதமர் தெரிவித்தார். 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடியும், கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடியும் வழங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளை விட இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கும் 2.5 மடங்கு கூடுதல் நிதி கிடைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, மாநிலத்தில் மூன்று மடங்கும், ரயில்வே துறையில் 2.5 மடங்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச ரேஷன், மருத்துவ சிகிச்சை மற்றும் பக்கா வீடுகள், கழிப்பறைகள் மற்றும் குழாய் நீர் போன்ற வசதிகளைப் பெற்று வருகின்றன.

 

|

வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்குகளை அடைய அனைவரின் முயற்சியின் அவசியம் எனக் குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்கள் மற்றும் தமிழக மக்களின் திறமை மீது நம்பிக்கை உள்ளது, தமிழக இளைஞர்களிடையே ஒரு புதிய நம்பிக்கை உருவாவதை என்னால் பார்க்க முடிகிறது என்று கூறினார். இந்த நம்பிக்கை வளர்ச்சியடைந்த பாரதத்தின் சக்தியாக மாறும் என்று கூறி, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். ரூ.1100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இரண்டு அடுக்கு புதிய சர்வதேச முனைய கட்டடம் ஆண்டுதோறும் 44 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கும், நெரிசல் நேரங்களில் சுமார் 3500 பயணிகளுக்கும் சேவை செய்யும். புதிய முனையத்தில் பயணிகளின் வசதிக்காக அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்கள் உள்ளன.

 

பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப் பிரிவு, 41.4 கி.மீ., தூரத்துக்கு இரட்டைப் பாதை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும்; மதுரை - தூத்துக்குடி இடையே 160 கி.மீ., துாரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம்; திருச்சிராப்பள்ளி - மானாமதுரை – விருதுநகர்; விருதுநகர் - தென்காசி சந்திப்பு; செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி - திருச்செந்தூர் ஆகிய ரயில் பாதை மின்மயமாக்கலுக்கான மூன்று திட்டங்கள் இதில் அடங்கும்; சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில் திறனை மேம்படுத்தவும், தமிழகத்தில் பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ரயில் திட்டங்கள் உதவும்.

 

|

ஐந்து சாலைத் துறை திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 81-ன் திருச்சி - கல்லகம் பிரிவுக்கு 39 கி.மீ நான்கு வழிச்சாலை; தேசிய நெடுஞ்சாலை 81-ன் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கி.மீ நீளத்திற்கு 4/2 வழிச்சாலை; தேசிய நெடுஞ்சாலை 785-ன் செட்டிகுளம் - நத்தம் பிரிவின் 29 கி.மீ நான்கு வழிச்சாலை; தேசிய நெடுஞ்சாலை 536-ன் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கி.மீ; தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையின் 44 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் ஆகியவை இதில் அடக்கம். திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிபட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த சாலைத் திட்டங்கள் உதவும்.

 

இந்த நிகழ்ச்சியின் போது முக்கியமான சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வின் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியும் இதில் அடங்கும். இந்தச் சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களை இணைக்கும், உலக பாரம்பரிய தளமான மாமல்லபுரத்திற்கு சாலை இணைப்பை மேம்படுத்தும் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

 

காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்கு கப்பல் நிறுத்துமிடம்-2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி/ இறக்குமதி முனையம்-2 மற்றும் மூலதன தூர்வாருதல் கட்டம்-5) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  பொது சரக்கு கப்பல் நிறுத்துமிடம் -2 திறப்பு நாட்டின் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாகும், இது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க உதவும்.

 

இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்ததோடு, ரூ .9000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள முக்கியமான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின்  ஐபி 101 (செங்கல்பட்டு) முதல் எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி பைப்லைன் வரை 488 கி.மீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின்  697 கி.மீ நீளமுள்ள விஜயவாடா-தருமபுரி மல்டிபிராடக்ட் பெட்ரோலிய பைப்லைன் (வி.டி.பி.எல்) ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு திட்டங்களில் அடங்கும்.

 

|

மேலும், இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி-கூத்தநாடு-பெங்களூர்-மங்களூர் எரிவாயுக் குழாய் திட்டம் 2-ன் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோயம்புத்தூர் பிரிவு வரை 323 கி.மீ இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டம் மற்றும் சென்னை வல்லூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில் பிஓஎல் குழாய்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இந்தத் திட்டங்கள் பிராந்தியத்தின் எரிசக்தியின் தொழில்துறை, உள்நாட்டு மற்றும் வணிக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு படியாகும். இவை இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுக்கும்.

 

கல்பாக்கத்தில்  உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (ஐ.ஜி.சி.ஏ.ஆர்) விரைவு அணு உலை எரிபொருள் மறுசுழற்சி நிலையத்தையும் (டி.எஃப்.ஆர்.பி) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட டி.எஃப்.ஆர்.பி ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதுபோன்று, உலகில் இதுஒன்று தான் உள்ளது. வேகமான அணு உலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பைடு மற்றும் ஆக்சைடு எரிபொருட்கள் இரண்டையும் மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. இது முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.  பெரிய வணிக அளவிலான விரைவான அணு உலை எரிபொருள் மறுசுழற்சி ஆலைகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியை இது குறிக்கிறது.

 

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதியையும் பிரதமர் திறந்து வைத்தார்.

 

 

 

 

 

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • Ramesh March 19, 2024

    Ramesh
  • kaleshababu virat March 15, 2024

    jaimodi
  • NARAYAN SEKWADIYA March 08, 2024

    सहारा इंडिया परिवार में काम करने वाले जितने कार्यकर्ता है वो सब स्वयंसेवक ही है। उनके रोजगार का रास्ता एवं जीवन भर की कमाई शीघ्र अति शीघ्र लौटाने की व्यवस्था की जाए। आपसे सहारा परिवार अलग कैसे हो सकता है?#NarendraModi #crcs #AmitShah
  • sant lal March 04, 2024

    बहुत-बहुत dhanyvad Narendra Modi CM sahab ji main Jan Kalyan party ki Pradesh Sangathan Mantri santlal Bansal jo ki aapane do 2000 karod Logon Ko Yojana aapane Diya Main samarthan Jan Kalyan party ki Pradesh Sangathan Mantri pura Jan Kalyan party aapki sahmat samarthan hai aur Aane Wale 2024 Mein Aapki Sarkar banane ka alag Sankalp Hamara Hai aur ham 2024 Mein Kuchh seaton Mein samarthan Karenge Kuchh seaton Mein chunav mein utarenge pratyashi Hamara number 8120 65 5923 hai Mani mukhymantri Shivraj Singh Chauhan ke sath vidhansabha mein Humne samarthan diya tha Bhari maton bahumat se Madhya Pradesh Se Jita tha BJP ko aur unke Kahane per Humne pure jankalyan party ki team pura Madhya Pradesh mein jitaane ka Sampark Li Thi Aur Lage hi thi Aur Main Jan Kalyan party ki Pradesh Sangathan Mantri santlal Bansal Pune samarthan Denge aur pratyashi dhanyvad Jay Shri Ram
  • Rajesh dwivedi March 04, 2024

    मैं भी मोदी का परिवार
  • narendra shukla February 28, 2024

    भारत माता की जय
  • narendra shukla February 28, 2024

    bharat mata ki jai
  • SHIV SWAMI VERMA February 27, 2024

    जय हो
  • Gireesh Kumar Upadhyay February 25, 2024

    mody
  • Gireesh Kumar Upadhyay February 25, 2024

    . .
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's Q3 GDP grows at 6.2%, FY25 forecast revised to 6.5%: Govt

Media Coverage

India's Q3 GDP grows at 6.2%, FY25 forecast revised to 6.5%: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 1, 2025
March 01, 2025

PM Modi's Efforts Accelerating India’s Growth and Recognition Globally