இந்திய ரிசர்வ் வங்கியின், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இரண்டு புதிய கண்டுபிடிப்பு முன்முயற்சிகளை, அதாவது நேரடி சிறு முதலீட்டுத் திட்டம், ரிசர்வ் வங்கியின் ஒருங்கினைக்கப்பட்ட குறைதீர்ப்புத் திட்டம் ஆகியவற்றை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், பெருந்தொற்று காலத்தில் நிதியமைச்சகம் மற்றும் ஆர்பிஐ போன்ற நிறுவனங்களின் முயற்சிகளைப் பாராட்டினார். “75-வது ஆண்டுப் பெருவிழா காலமும் 21-ம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டு காலமும் நாட்டின் வளர்சிக்கு மிகவும் முக்கியத்துவமானவையாகும் இத்தகைய சூழலில், ஆர்பிஐயின் பங்கும் மிகப்பெரியதாகும். நாட்டின் எதிர்பார்ப்புகளை ஆர்பிஐ அணி நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் கூறினார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் முதலீட்டு வாய்ப்பை இந்தத் திட்டங்கள் விரிவுபடுத்தும் என்றும் மூலதனச் சந்தைகளை எளிதாகவும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நேரடி சிறு முதலீட்டுத் திட்டம், அரசு பங்குப் பத்திரங்களில் பாதுகாப்பான முதலீட்டு வழியாகவும் நாட்டின் சிறு முதலீட்டாளர்களுக்கு எளிதானதாகவும் இருக்கும். இதேபோல், ஒரே தேசம், ஒரே குறைதீர்ப்பு முறை என்பது இன்று ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டத்தால் வங்கித் துறையில் புதிய வடிவம் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டங்களில் குடி மக்களை மையமாகக் கொண்டவை என்பதைப் பிரதமர் வழியுறுத்தினார். ஜனநாயகத்தின் மிகப்பெரிய உரைகல்களைில் ஒன்று அதன் குறைதீர்ப்பு முறையை வலுப்படுத்துவதாகும். இந்த திசையில் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்புத் திட்டம் நீண்டகால பயனைத் தரும். அதேபோல் நேரடி சிறு முதலீட்டுத் திட்டம் நடுத்தர வகுப்பினர், ஊழியர்கள், சிறு வணிகர்கள், மூத்தக் குடிமக்கள் ஆகியோரின் சிறு சேமிப்புகளை நேரடியாக ஈடுபடுத்தும் என்பதால் பொருளாதாரத்தில் அனைவரையும் உள்ளடக்கி வலுப்படுத்துவதாக இருப்பதோடு அரசு பங்குபத்திரங்களில் பாதுகாப்பை ஏற்படுத்தும். அரசு பங்குபத்திரங்கள் உத்திரவாதமான பைசல் முறையைக் கொண்டிருப்பதால் இது சிறு முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
கடந்த 7 ஆண்டுகளில், வாராக் கடன்கள் வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டு, கடன் வசூல் மற்றும் தீர்ப்பாயம், பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு மீது கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒன்றன்பின் ஒன்றாக நிதித்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார். வங்கித்துறையை மேலும் வலுப்படுத்த, கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, இந்த வங்கிகளின் நிர்வாகம் மேம்பட்டிருப்பதுடன், முதலீட்டாளர்களிடையே இவற்றின் மீதான நம்பிக்கையும் வலுவடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் நிதி சார்ந்த உள்ளடக்கிய சேவைகள் முதல், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு வரை நாட்டின் வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். “கொவிட் நெருக்கடி நேரத்தில் இவற்றின் வலிமையை நம்மால் காண முடிந்தது. ரிசர்வ் வங்கியின் முடிவுகளும், அண்மைக்காலத்தில் அரசு மேற்கொண்ட முக்கிய முடிவுகளின் விளைவுகளை அதிகரிக்க உதவியது” என்றும் அவர் தெரிவித்தார்.
6-7 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிச் சேவை, ஓய்வூதியம், காப்பீடு போன்றவை, இந்தியாவில் தனித்தன்மையுள்ள மன்றம் போன்று இருந்ததாகப் பிரதமர் கூறினார். இந்த சேவைகளை நாட்டில் உள்ள சாமான்ய மக்கள், ஏழைக்குடும்பங்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள்- வியாபாரிகள், பெண்கள், தலித்துகள் - ஒடுக்கப்பட்ட– பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளிட்டோர் எளிதில் அணுக முடியாததாக இருந்தது. முந்தைய நடைமுறைகளை விமர்சித்த பிரதமர், இந்தச் சேவைகளை மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தவர்கள் ஒருபோதும் அதில் கவனம் செலுத்தவில்லை என்றார். மாறாக, மாற்றத்தை ஏற்படுத்தாதற்கு பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறிவந்தனர். வங்கிக் கிளை இல்லை, பணியாளர்கள் இல்லை, இணையதள வசதி இல்லை, விழிப்புணர்வு இல்லை, எந்த சிந்தனையும் இல்லை என்ற வாதங்களை எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுபிஐ சேவை, இந்தியாவைக் குறுகிய காலத்தில் உலகின் முன்னணி டிஜிட்டல் பணபரிவர்த்தனை நாடாக மாற்றியதாகப் பிரதமர் தெரிவித்தார். 7 ஆண்டுகளில், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா 19 மடங்கு முன்னேறியுள்ளது. தற்போது நமது வங்கி முறை 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் 12 மாதங்களிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் செயல்பாட்டில் இருப்பதைத் திரு மோடி சுட்டிக்காட்டினார்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். “பொறுப்புள்ள மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த இடம் என்ற இந்தியாவின் புதிய அடையாளத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
अमृत महोत्सव का ये कालखंड, 21वीं सदी का ये दशक देश के विकास के लिए बहुत अहम है।
ऐसे में RBI की भी भूमिका बहुत बड़ी है।
मुझे पूरा विश्वास है कि टीम RBI, देश की अपेक्षाओं पर खरा उतरेगी: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 12, 2021
Retail direct scheme से देश में छोटे निवेशकों को गवर्नमेंट सिक्योरिटीज़ में इंवेस्टमेंट का सरल और सुरक्षित माध्यम मिल गया है।
— PMO India (@PMOIndia) November 12, 2021
इसी प्रकार, Integrated ombudsman scheme से बैंकिंग सेक्टर में One Nation, One Ombudsmen System ने आज साकार रूप लिया है: PM @narendramodi
आज जिन दो योजनाओं को लॉन्च किया गया है, उससे देश में निवेश के दायरे का विस्तार होगा और कैपिटल मार्केट्स को Access करना, निवेशकों के लिए अधिक आसान, अधिक सुरक्षित बनेगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 12, 2021
बीते 7 सालों में, NPAs को पारदर्शिता के साथ Recognize किया गया,
— PMO India (@PMOIndia) November 12, 2021
Resolution और recovery पर ध्यान दिया गया,
पब्लिक सेक्टर बैंकों को Recapitalize किया गया,
फाइनेंशियल सिस्टम और पब्लिक सेक्टर बैंकों में एक के बाद एक रिफॉर्म्स किए गए: PM @narendramodi
बैंकिंग सेक्टर को और मज़बूत करने के लिए Co-operative बैंकों को भी RBI के दायरे में लाया गया।
— PMO India (@PMOIndia) November 12, 2021
इससे इन बैंकों की गवर्नेंस में भी सुधार आ रहा है और जो लाखों depositors हैं, उनके भीतर भी इस सिस्टम के प्रति विश्वास मजबूत हो रहा है: PM @narendramodi
जिन लोगों पर इन सुविधाओं को गरीब तक पहुंचाने की जिम्मेदारी थी उन्होंने भी इस पर कभी ध्यान नहीं दिया।
— PMO India (@PMOIndia) November 12, 2021
बल्कि बदलाव ना हो इसके लिए भांति-भांति के बहाने बनाए जाते थे।
कहा जाता था-बैंक ब्रांच नहीं है, स्टाफ नहीं है,इंटरनेट नहीं है, जागरूकता नहीं है,ना जाने क्या-क्या तर्क होते थे: PM
6-7 साल पहले तक भारत में बैंकिंग, पेंशन, इंश्योरेंस, ये सबकुछ एक exclusive club जैसा हुआ करता था।
— PMO India (@PMOIndia) November 12, 2021
देश का सामान्य नागरिक, गरीब परिवार, किसान, छोटे व्यापारी-कारोबारी, महिलाएं, दलित-वंचित-पिछड़े, इन सबके लिए ये सब सुविधाएं बहुत दूर थीं: PM @narendramodi
UPI ने तो बहुत ही कम समय में डिजिटल ट्रांजेक्शंस के मामले में दुनिया का अग्रणी देश बना दिया है।
— PMO India (@PMOIndia) November 12, 2021
सिर्फ 7 सालों में भारत ने डिजिटल ट्रांजेक्शंस के मामले में 19 गुणा की छलांग लगाई है।
आज 24 घंटे, सातों दिन और 12 महीने देश में कभी भी, कहीं भी हमारा बैंकिंग सिस्टम चालू रहता है: PM
हमें देश की, देश के नागरिकों की आवश्यकताओं को केंद्र में रखना ही होगा, निवेशकों के भरोसे को निरंतर मजबूत करते रहना होगा।
— PMO India (@PMOIndia) November 12, 2021
मुझे पूरा विश्वास है कि एक संवेदनशील और इन्वेस्टर फ्रेंडली डेस्टीनेशन के रूप में भारत की नई पहचान को RBI निरंतर सशक्त करता रहेगा: PM @narendramodi