Quoteவிஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா' திட்டம் அறிமுகம்
Quoteபிரதமர் விஸ்வகர்மா லோகோ, 'சம்மான் சமர்த்ய சம்ரிதி' மற்றும் போர்ட்டல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்
Quoteதனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள் மற்றும் உபகரண கையேட்டை வெளியிட்டார்
Quote18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ் வழங்கப்பட்டது
Quoteநாட்டின் ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஒவ்வொரு விஸ்வகர்மாவுக்கும் 'யசோபூமி'யை அர்ப்பணிக்கிறேன்.
Quote"விஸ்வகர்மாக்களை அங்கீகரித்து ஆதரிப்பது காலத்தின் தேவை"
Quote"அவுட்சோர்சிங் வேலை எங்கள் விஸ்வகர்மா நண்பர்களுக்கு வர வேண்டும், அவர்கள் உலகளாவிய விநியோக சங்கிலியின் ஒரு முக்கிய பகுதியாக மாற வேண்டும்"
Quote"இந்த மாறிவரும் காலங்களில், விஸ்வகர்மா நண்பர்களுக்கு பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் முக்கியமானவை"
Quote"தங்களைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லாதவர்களுக்காக மோடி நிற்கிறார்"
Quote"உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுத்தல் என்பது முழு நாட்டின் பொறுப்பு"
Quoteஇன்றைய வளர்ந்த பாரதம்
Quote18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.
Quoteநாட்டின் அன்றாட வாழ்க்கையில் விஸ்வகர்மாக்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தொழில்நுட்பத்தில் என்னதான் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், விஸ்வகர்மாக்கள் சமூகத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். விஸ்வகர்மாக்களை அங்கீகரித்து ஆதரிப்பது காலத்தின் தேவை என்றார்.
Quoteஅதனால்தான் இந்தத் திட்டம் விஸ்வகர்மா நண்பர்களை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு முயற்சியாகும்", என்று பிரதமர் கூறினார்.
Quoteவிஸ்வகர்மா நண்பர்கள் மிகக் குறைந்த வட்டியில் எந்த பிணையமும் கேட்காமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான 'யசோபூமி'யை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'யசோபூமி' ஒரு அற்புதமான மாநாட்டு மையம், பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா திட்டத்தை' அவர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா லோகோ, டேக்லைன் மற்றும் போர்ட்டலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள், உபகரண  கையேடு மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். 18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.

 

|

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர், குரு-சிஷ்ய பரம்பரை மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகிய கண்காட்சிகளை பார்வையிட்டார். யசோபூமியின் முப்பரிமாண மாடலையும் அவர் ஆய்வு செய்தார். முன்னதாக, தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை துவாரகா செக்டர் 21 முதல் புதிய மெட்ரோ நிலையம் 'யசோபூமி துவாரகா செக்டர் 25' வரையிலான சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இது பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான விஸ்வகர்மாக்களுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  கண்காட்சியை பார்வையிட்டு, கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் கலந்துரையாடிய சிறந்த அனுபவத்தையும் அவர் எடுத்துரைத்தார். பொதுமக்கள் இந்த நிகழ்வை பார்வையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். லட்சக்கணக்கான கைவினைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா திட்டம் ஒரு நம்பிக்கை ஒளியாக வருகிறது என்று பிரதமர் கூறினார்.

சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் - 'யசோபூமி' தொடர்பாக, இந்த அற்புதமான வசதியை நிர்மாணிப்பதில் தொழிலாளர்கள் மற்றும் விஸ்வகர்மாக்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். "இன்று நான் நாட்டின் ஒவ்வொரு தொழிலாளிக்கும், ஒவ்வொரு விஸ்வகர்மாவுக்கும் 'யசோபூமி'யை அர்ப்பணிக்கிறேன்", என்று அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சியுடன் தொடர்புடைய விஸ்வகர்மாக்களிடம் பேசிய அவர், 'யசோபூமி' அவர்களின் படைப்புகளை உலக மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் இணைக்கும் துடிப்பான மையமாக இருக்கும் என்று கூறினார்.

 

|

நாட்டின் அன்றாட வாழ்க்கையில் விஸ்வகர்மாக்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தொழில்நுட்பத்தில் என்னதான் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், விஸ்வகர்மாக்கள் சமூகத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். விஸ்வகர்மாக்களை அங்கீகரித்து ஆதரிப்பது காலத்தின் தேவை என்றார்.

"விஸ்வகர்மாக்களின் மரியாதையை உயர்த்துவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும், செழிப்பை வளர்ப்பதற்கும் அரசாங்கம் ஒரு நண்பனாக முன்வந்துள்ளது" என்று திரு மோடி குறிப்பிட்டார். கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் 18 கவனம் செலுத்தும் பகுதிகளை விளக்கிய பிரதமர், தச்சர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள், சிற்பிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், காலணிகள் தைப்பவர்கள், தையல்காரர்கள், கொத்தனார்கள், சிகையலங்காரத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் போன்றோர் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அதற்கான செலவு ரூ.13,000 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது கைவினைஞர்களுடன் பேசியபோது தனது தனிப்பட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையை எடுத்துரைத்தார். உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்கள் வேலையை சிறு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன என்று அவர் கூறினார். "இந்த அவுட்சோர்சிங் வேலை எங்கள் விஸ்வகர்மா நண்பர்களுக்கு வர வேண்டும், அவர்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற வேண்டும், இதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதனால்தான் இந்தத் திட்டம் விஸ்வகர்மா நண்பர்களை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு முயற்சியாகும்", என்று பிரதமர் கூறினார்.

 

|

"இந்த மாறிவரும் காலங்களில், விஷ்வகர்மா நண்பர்களுக்கு பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் முக்கியமானவை" என்று கூறிய பிரதமர், திறமையான கைவினைஞர்கள் மற்றும் தொழில்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். பயிற்சிக்  காலங்களில் விஸ்வகர்மா நண்பர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். நவீன உபகரண பெட்டிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள   வவுச்சரும் வழங்கப்படும் என்றும், தயாரிப்புகளின் பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தலுக்கு அரசாங்கம் உதவும் என்றும் அவர் கூறினார். ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே உபகரண பெட்டிகளை  வாங்க வேண்டும் என்றும், இந்த கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விஸ்வகர்மாக்களுக்கு பிணையில்லா நிதி வழங்குவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், உத்தரவாதம் கேட்கப்படும்போது, அந்த உத்தரவாதம் மோடியால் வழங்கப்படுகிறது என்றார். விஸ்வகர்மா நண்பர்கள் மிகக் குறைந்த வட்டியில் எந்த பிணையமும் கேட்காமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது" என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தனித்துவமான விளைபொருட்களை ஊக்குவிக்கும் 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' திட்டத்தை எடுத்துரைத்தார். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கதவுகளைத் திறப்பதையும், 'மாற்றுத் திறனாளிகளுக்கு' சிறப்பு வசதிகளை உருவாக்குவதையும் அவர் குறிப்பிட்டார். "தங்களைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லாதவர்களுக்காக மோடி நிற்கிறார்" என்று பிரதமர் கூறினார். சேவை செய்யவும், கண்ணியமான வாழ்க்கையை வழங்கவும், சேவைகள் தவறாமல் நடைபெறுவதை உறுதி செய்யவும்தான் இங்கு வந்துள்ளதாக அவர் கூறினார். "இது மோடியின் உத்தரவாதம்" என்று அவர் மேலும் கூறினார்.

ஜி 20 கிராஃப்ட் பஜாரில் தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவை உலகம் கண்டது என்று பிரதமர் கூறினார். வருகை தரும் பிரமுகர்களுக்கான பரிசுப் பொருட்களில் கூட விஸ்வகர்மா நண்பர்களின் தயாரிப்புகள் இருந்தன. "  உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்கும் இந்த அர்ப்பணிப்பு முழு நாட்டின் பொறுப்பாகும்", என்று அவர் கூறினார். "முதலில் நாம் உள்ளூருக்கான  குரலாக இருக்க வேண்டும், பின்னர் நாம் உலக அளவில் இதனை எடுத்துச் செல்ல  வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

 

|

விநாயகர் சதுர்த்தி, தந்தேராஸ், தீபாவளி போன்ற நாட்டில் வரவிருக்கும் பண்டிகைகளைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உள்ளூர் தயாரிப்புகளை குறிப்பாக நாட்டின் விஸ்வகர்மாக்கள் பங்களித்தவற்றை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்,

"இன்றைய வளர்ந்த பாரதம் ஒவ்வொரு துறையிலும் தனக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி வருகிறது" என்று கூறிய பிரதமர், உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ள பாரத மண்டபத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, யசோபூமி இந்தப் பாரம்பரியத்தை அதிக பிரமாண்டத்துடன் முன்னெடுத்துச் சென்றுள்ளது என்று கூறினார். "யசோபூமியில் இருந்து வரும் செய்தி உரக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. இங்கு நடைபெறும் எந்தவொரு நிகழ்வும் வெற்றியையும் புகழையும் அடையும்" என்று கூறிய திரு மோடி எதிர்கால இந்தியாவைக் காண்பிப்பதற்கான ஊடகமாக யசோபூமி மாறும் என்றார்.

இந்தியாவின் மகத்தான பொருளாதார வலிமையையும், வர்த்தக வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில், நாட்டின் தலைநகரில் இது ஒரு தகுதியான மையமாகும் என்று அவர் கூறினார். இது மல்டிமோடல் இணைப்பு மற்றும் பிரதமர் விரைவு சக்தி இரண்டையும் பிரதிபலிக்கிறது என்று அவர் தொடர்ந்தார். மெட்ரோ மூலம் மையத்திற்கு வழங்கப்பட்ட இணைப்பு மற்றும் மெட்ரோ முனையம் திறப்பு குறித்து பேசியதன் மூலம் அவர் இதை விளக்கினார். யசோபூமியின் சுற்றுச்சூழல் அமைப்பு பயனர்களின் பயணம், இணைப்பு, தங்குமிடம் மற்றும் சுற்றுலா தேவைகளை கவனித்துக் கொள்ளும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின் புதிய துறைகள் உருவாகி வருகின்றன என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஐம்பது முதல் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இவ்வளவு பெரிய மற்றும் விகிதாச்சாரத்தில் ஒரு தகவல் தொழில்நுட்பத் துறையை யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்று அவர் வலியுறுத்தினார். சமூக ஊடகங்கள் கூட முப்பது முதல் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கற்பனையாக இருந்தன என்று அவர் மேலும் கூறினார். மாநாட்டு சுற்றுலாவின் எதிர்காலம் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், இத்துறை இந்தியாவுக்கு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், இதன் மதிப்பு ரூ.25,000 கோடிக்கும் அதிகமாகும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் உலகில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய கண்காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன, அங்கு மாநாட்டு சுற்றுலாவுக்கு வருபவர்கள் ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியை விட அதிக பணத்தை செலவிடுகிறார்கள் என்று அவர் எடுத்துரைத்தார். இவ்வளவு பெரிய தொழில்துறையில் இந்தியாவின் பங்கு சுமார் ஒரு சதவீதம் மட்டுமே என்றும், இந்தியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வெளிநாடுகளுக்குச் செல்கின்றன என்றும் திரு மோடி சுட்டிக்காட்டினார். இந்தியாவும் இப்போது மாநாட்டு சுற்றுலாவுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

|

நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகளுக்கு தேவையான வளாகங்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே மாநாட்டு சுற்றுலாவும் முன்னேறும் என்று பிரதமர் கூறினார், எனவே பாரத மண்டபம் மற்றும் யசோபூமி மையம் இப்போது தில்லியை மாநாட்டு சுற்றுலாவின் மிகப்பெரிய மையமாக மாற்றப் போகின்றன. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில், "சர்வதேச மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகளுக்கு உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வரும் இடமாக யசோபூமி மாறும்" என்று திரு மோடி மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்களை யசோபூமிக்கு பிரதமர் அழைத்தார். "இன்று உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து கண்காட்சி மற்றும் நிகழ்வுத் துறையுடன் தொடர்புடையவர்களை தில்லிக்கு வருமாறு நான் அழைக்கிறேன். கிழக்கு-மேற்கு-வடக்கு-தெற்கு என நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தின் திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சித் துறையை நான் அழைப்பேன். உங்கள் விருது விழாக்கள், திரைப்பட விழாக்களை இங்கே நடத்த வேண்டும்,  முதல் திரைப்படக் காட்சிகளை இங்கே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  பாரத மண்டபம் மற்றும் யசோபூமியில் சேர சர்வதேச நிகழ்வு நிறுவனங்கள், கண்காட்சித் துறையுடன் தொடர்புடையவர்களை நான் அழைக்கிறேன்’’ என அவர் கூறினார்.

பாரத மண்டபமும், யசோபூமியும் இந்தியாவின் விருந்தோம்பல், மேன்மை மற்றும் கம்பீரத்தின் அடையாளங்களாக மாறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். "பாரத மண்டபம் மற்றும் யசோபூமி இரண்டும் இந்திய கலாச்சாரம் மற்றும் அதிநவீன வசதிகளின் சங்கமமாகும், மேலும் இந்த பெரிய நிறுவனங்கள் இந்தியாவின் கதையை உலகின் முன் வெளிப்படுத்துகின்றன" என்று பிரதமர் குறிப்பிட்டார். தனக்கான சிறந்த வசதிகளை விரும்பும் புதிய இந்தியாவின் விருப்பங்களையும் இது பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். "எனது வார்த்தைகளைக் கவனியுங்கள்", "இந்தியா இப்போது நிற்கப்போவதில்லை" என்று கூறிய திரு மோடி, 2047 க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கும், புதிய இலக்குகளை உருவாக்குவதற்கும், அவற்றுக்காக பாடுபடுவதற்கும் குடிமக்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார். குடிமக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டியதன் அவசியத்தையும், ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். "நமது விஸ்வகர்மா சகாக்கள் மேக் இன் இந்தியாவின் பெருமை, இந்த சர்வதேச மாநாட்டு மையம் இந்தப் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக மாறும்" என்று திரு மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

 

|

இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நாராயண் ரானே மற்றும் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

யசோபூமி

துவாரகாவில் 'யசோபூமி' செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் நாட்டில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிரதமரின் பார்வை வலுப்படுத்தப்படும். 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான திட்டப் பரப்பளவு மற்றும் 1.8 லட்சம் சதுர மீட்டருக்கும்  அதிகமான மொத்த கட்டுமானப் பரப்பளவு கொண்ட 'யசோபூமி'  உலகின் மிகப்பெரிய கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடத்துவதற்கான  வசதிகளைக் கொண்டுள்ளது.

சுமார்  5400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 'யசோபூமி'யில் அற்புதமான மாநாட்டு மையம், பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகள் உள்ளன. 73 ஆயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்ட மாநாட்டு மையம் , பிரதான கலையரங்கம், கிராண்ட் பால்ரூம் மற்றும் மொத்தம் 11,000 பிரதிநிதிகளை வைத்திருக்கும் திறன் கொண்ட 13 கூட்ட அறைகள் உட்பட 15 மாநாட்டு அறைகளைக் கொண்டுள்ளது. மாநாட்டு மையம் நாட்டின் மிகப்பெரிய எல்இடி மீடியா முகப்பு கொண்டது. அதில்  உள்ள முழு மண்டபத்தில் சுமார் 6,000 விருந்தினர்கள் அமரும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கம் மிகவும் புதுமையான தானியங்கி இருக்கை அமைப்புகளில் ஒன்றாகும், இது தரையை ஒரு தட்டையான தளம் அல்லது வெவ்வேறு இருக்கை உள்ளமைவுகளுக்கான ஆடிட்டோரியம் பாணி அடுக்கு இருக்கையாக அனுமதிக்கிறது. அரங்கில் பயன்படுத்தப்படும் மரத்தளங்கள் மற்றும் ஒலிச்சுவர் பேனல்கள் பார்வையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை உறுதி செய்யும். தனித்துவமான இதழ் கூரை கொண்ட கிராண்ட் பால்ரூம் சுமார் 2,500 விருந்தினர்களை தங்க வைக்க முடியும். இது 500 பேர் வரை அமரக்கூடிய விரிவாக்கப்பட்ட திறந்த வெளியையும் கொண்டுள்ளது. எட்டு தளங்களில் அமைந்துள்ள 13 கூட்ட அரங்குகளில் பல்வேறு அளவிலான கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

 

|

'யசோபூமி' உலகின் மிகப்பெரிய கண்காட்சி அரங்குகளில் ஒன்றையும் வழங்குகிறது.  1.07 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி அரங்குகள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வணிக நிகழ்வுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்படும், மேலும் பல்வேறு ஸ்கைலைட்டுகள் மூலம் விண்வெளியில் ஒளியை வடிகட்டும் தாமிர கூரையுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய வரவேற்பறை இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரவேற்பறையில் மீடியா ரூம்கள், விவிஐபி ஓய்வறைகள், பொருட்கள் பாதுகாப்பு அறை வசதிகள், பார்வையாளர் தகவல் மையம் மற்றும் டிக்கெட் போன்ற பல்வேறு ஆதரவு பகுதிகள் இருக்கும்.

'யசோபூமி'யில் உள்ள அனைத்து பொது விநியோகப் பகுதிகளும் மாநாட்டு மையத்தின் வெளிப்புற இடத்துடன் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது இந்தியக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் பொருட்களால் டெராஸ்ஸோ தரைகளின் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது, ரங்கோலிகளின் வடிவங்களைக் குறிக்கும் பித்தளை இன்லே, தொங்கவிடப்பட்ட ஒலி உறிஞ்சும் உலோக சிலிண்டர்கள் மற்றும் ஒளிரும் வடிவ சுவர்கள் உள்ளன.

'யசோபூமி' 100% கழிவு நீர் மறுபயன்பாட்டுடன் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு, மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் வளாகம் சிஐஐயின் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலிடமிருந்து (ஐஜிபிசி) பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றுள்ளது.

பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'யசோபூமி'யில் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3,000 க்கும் மேற்பட்ட கார்களுக்கான நிலத்தடி கார் பார்க்கிங் வசதியும் 100 க்கும் மேற்பட்ட மின்சார சார்ஜிங் புள்ளிகளையும் கொண்டுள்ளது.

புதிய மெட்ரோ நிலையமான 'யசோபூமி துவாரகா செக்டார் 25' திறப்பு விழாவுடன் 'யசோபூமி' டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையுடன் இணைக்கப்படும். புதிய மெட்ரோ நிலையத்தில் மூன்று சுரங்கப்பாதைகள் இருக்கும் - நிலையத்தை கண்காட்சி அரங்குகள், மாநாட்டு மையம் மற்றும் மத்திய மண்டபத்துடன் இணைக்கும் 735 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை; மற்றொன்று துவாரகா அதிவேக நெடுஞ்சாலை வழியாக நுழைவு / வெளியேறலை இணைக்கிறது; மூன்றாவது மெட்ரோ நிலையத்தை எதிர்கால 'யசோபூமி' கண்காட்சி அரங்குகளின் வரவேற்பறையுடன் இணைக்கிறது.

 

|

பி.எம். விஸ்வகர்மா

பாரம்பரிய கைவினைக் கலைகளில்  ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு அளிப்பது பிரதமரின் தொடர்ச்சியான நோக்கமாக இருந்து வருகிறது. கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், பழங்கால பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், உள்ளூர் தயாரிப்புகள், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் செழிக்கவும் இந்தக் கவனம் செலுத்தப்படுகிறது.

பிரதமர் விஸ்வகர்மாவுக்கு மத்திய அரசு ரூ.13,000 கோடி நிதி வழங்கும். இந்த திட்டத்தின் கீழ், பயோமெட்ரிக் அடிப்படையிலான பி.எம் விஸ்வகர்மா போர்ட்டலைப் பயன்படுத்தி பொது சேவை மையங்கள் மூலம் விஸ்வகர்மாக்கள் இலவசமாக பதிவு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி சம்பந்தப்பட்ட திறன் மேம்பாடு, டூல்கிட் ஊக்கத்தொகை ரூ.15,000, ரூ.1 லட்சம் (முதல் தவணை) மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாவது தவணை) வரை பிணையற்ற கடன் ஆதரவு 5% சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்படும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு வழங்கப்படும்.

விஸ்வகர்மாக்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய திறன்களை வலுப்படுத்துவதையும் வளர்ப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதும், அவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் பிரதமர் விஸ்வகர்மாவின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆதரவை வழங்கும். பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் பதினெட்டு பாரம்பரிய கைவினைப் பணிகள் சேர்க்கப்படும். இவர்களில் (i) தச்சர் ; (ii) படகு தயாரிப்பாளர்; (iii) கவசம்; (iv) கொல்லர்; (v) சுத்தி மற்றும் கருவிகள் செய்பவர் (vi) பூட்டு செய்பவர்; (vii) பொற்கொல்லர்; (viii) குயவர்; (ix) சிற்பி, கல் உடைப்பவர்; (x) காலணிகள் தைப்பவர் (செருப்புத் தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்); (xi) கொத்தனார் (ராஜமிஸ்திரி); (xii) கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பாளர் / கயிறு நெசவாளர்; (xiii) பொம்மை மற்றும் பொம்மை தயாரிப்பாளர் (பாரம்பரியம்); (xiv) முடி திருத்துபவர் ; (xv) கார்லண்ட் மேக்கர்; (xvi) சலவைத் தொழிலாளி; (xvii) தையல்காரன்; மற்றும் (xviii) மீன்பிடி வலை தயாரிப்பாளர் ஆகியோர் அடங்குவர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • Premlata Singh October 13, 2023

    जन्म दिवस की हार्दिक बधाई 🎂🎈🎁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐
  • Premlata Singh October 13, 2023

    भारत माता की जय ।वन्देमातरम, वन्देमातरम 🙏🌷
  • Iqbal Afinwala October 07, 2023

    The real tribute to the God Vishwakarma and the Vishwakarma Bandhu.... My P M. loves. all those who are helpful to the India....
  • ram surat September 28, 2023

    mujhe paisa chahiye arjent main 3910914431 ram surat central bank of india
  • Sandeep Ghildiyal September 18, 2023

    आपका सम्मान करते हुए माननीय प्रधानमंत्री भारत सरकार यानी अखंड पूर्ण हिंद स्वराज भारत सरकार यह केवल संभव था तो आप ही के द्वारा था वास्तव में आप भारतवासियों को एक परिवार जनों को एक गरीब परिवार को एक मध्यम परिवार को और एक आम मानव को आप एक अन्नदाता के रूप में मिले यह इस बात में कोई असत्य नहीं है मैं भी आपकी पूरी जीवनी अच्छी और निष्कर्ष किया कि कैसे अपने एक सफलता किया देश के प्रथम सफल प्रधानमंत्री बनने का और आगे भी इसी तरह से इस पार्टी के माध्यम से जनता का भला होगा मैं महाकाल से यही दुआ है मेरी और आपके इस कार्य को यानि हर घर स्वच्छ जल हर घर उज्ज्वला योजना और हर घर सम्मान आपका काम आपका नाम आपका सम्मान ही है हमारा भारत का सम्मान इस तरह से आप अपने जीवन में इस भारत देश का नाम और इस भारत देश का काम और इस भारत देश का गौरव और इस भारत देश का सौरव यानी कि गर्व है हमें आपके इस काम में और इस सम्मान में यह एक काफी ज्योति पूर्ण रहा होगा आपका एक इतना जीवन जीने में एक प्रधानमंत्री बनने में मैं आपके चरणों में नमन करूंगा इन बातों के लिए और भगवान महाकाल से दुआ करूंगा कि 2024 में यानी अगले वर्ष आपकी ही यानी भारतीय जनता पार्टी पूर्ण बहुमत रूप से भारत में आए और अगले 5 साल 2029 तक इस तरह से काम करें कि भारत नंबर वन पर हर चीज में आ जाए यही में दुआ है जय श्री राम आपका नमन जय श्री राम
  • CHANDRA KUMAR September 18, 2023

    कांग्रेस पार्टी अध्यक्ष मल्लिकार्जुन खड़गे ने, G20 सम्मेलन का मजाक उड़ाते हुए कहा, "वो कौन सा सम्मेलन था G 2, हां वही G 2, क्योंकि उसमें जीरो तो दिखाई ही नहीं देता, वहां कमल का फूल बना हुआ है।" दरअसल मल्लिकार्जुन खड़गे को G 2 भी नहीं दिख रहा था, मल्लिकार्जुन खड़गे को 2 G दिख रहा था। कांग्रेस पार्टी ने 2 G घोटाला किया, जबकि बीजेपी ने G 20 सम्मेलन किया। कांग्रेस पार्टी ने देश के मतदाताओं का विश्वास तोड़ा, जबकि बीजेपी ने देश के मतदाताओं का सम्मान बढ़ाया। विश्व के सभी देश के राष्ट्रध्यक्ष एक साथ भारत आकर, भारतीय जनता के उपलब्धियों और भारतीय सभ्यता के ऊंचाई को देखा । भारत अब विश्व का नेतृत्व करने की ओर बढ़ रहा है। देश की जनता के पास अब पहले से अधिक आत्मविश्वास और आत्मगौरव है, तथा देश के लिए कुछ कर गुजरने की ललक है। कांग्रेस पार्टी ने देश के इस स्वाभिमान को कभी पल्लवित होने का मौका ही नहीं दिया। देश का कमल मुरझा रहा था, इसीलिए भारतीय जनता ने, देश के राजनीति के तालाब का पानी ही बदल दिया। दुष्यंत कुमार की पंक्ति को भारतीय जनता ने सार्थक करके दिखा दिया है, अब तो इस तालाब का पानी बदल दो । ये कँवल के फूल कुम्हलाने लगे हैं ।। दुर्भाग्य से कांग्रेस पार्टी को खिला हुआ कमल दिखना ही बंद हो गया है, देश का हर बच्चा का उत्साह खिला हुआ कमल के समान है, बीजेपी इसे कुम्हलाने से बचाता रहेगा, देश का भविष्य और सभ्यता संस्कृति को उज्जवल बनाता रहेगा। बीजेपी आगे भी भारतीय राजनीति के तालाब के पानी को बदलता रहेगा, ताकि कंवल का फूल खिला रहे, कुंभलाए नहीं।
  • Arun Kumar Pradhan September 18, 2023

    भारत माता की जय
  • G Santosh Kumar September 18, 2023

    🙏💐💐💐🚩 Jai Sri Ram 🚩 Bharat mathaki jai 🇮🇳 Jai Sri Narendra Damodara Das Modi ji ki jai jai Hindu Rastra Sanatan Dharm ki Jai 🚩 Jai BJP party Jindabad 🚩🙏
  • Babaji Namdeo Palve September 18, 2023

    भारत माता की जय
  • NAGESWAR MAHARANA September 18, 2023

    Jay Shree Ram
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian telecom: A global leader in the making

Media Coverage

Indian telecom: A global leader in the making
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi calls to protect and preserve the biodiversity on the occasion of World Wildlife Day
March 03, 2025

The Prime Minister Shri Narendra Modi reiterated the commitment to protect and preserve the incredible biodiversity of our planet today on the occasion of World Wildlife Day.

In a post on X, he said:

“Today, on #WorldWildlifeDay, let’s reiterate our commitment to protect and preserve the incredible biodiversity of our planet. Every species plays a vital role—let’s safeguard their future for generations to come!

We also take pride in India’s contributions towards preserving and protecting wildlife.”