பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத் அசர்வாவில் குடிமை மருத்துவமனையில் ரூ.1275 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதார வசதிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்ற பிரதமர், சுகாதார உள்கட்டமைப்புத் திட்டங்களை அங்கு பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து மேடைக்கு வந்து பிரதமர் கவுரவிக்கப்பட்டார். பின்னர், அவர் முடிவுற்ற திட்டங்கள் இடம்பெற்ற பெயர்ப் பலகையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்: மஞ்சுஸ்ரீ மில் வளாகத்தில் உள்ள சிறுநீரக நோய் ஆராய்ச்சி மையம், அசர்வாவில் குடிமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனை கட்டிடம், யு என் மேத்தா மருத்துவமனையில் விடுதி, ஒரு மாநிலம் ஒரு டயாலிசிஸ் குஜராத் டயாலிசிஸ் திட்டத்தின் விரிவாக்கம், குஜராத் மாநிலத்திற்கான கீமோ திட்டம், அதைத் தொடர்ந்து, கோத்ரா புதிய மருத்துவக் கல்லூரி, சோலாவில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரியின் புதிய அதிநவீன பன்னோக்கு மருத்துவமனை, அசர்வாவில் குடிமை மருத்துவமனையில் மகளிர் மருத்துவ கல்லூரி, அசர்வாவில் ரென் பேஸ்ரா குடிமை மருத்துவமனை, பிலோடாவில் 125 படுக்கைகள் கொண்ட மாவட்ட மருத்துவமனை, அஞ்சாரில் 100 படுக்கைகள் கொண்ட மாவட்ட துணை மருத்துவமனை ஆகியவற்றிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
மோர்வா ஹடாஃபில் உள்ள சிஎச்சி, ஜூனாகத்தில் உள்ள ஜிஎம்எல்ஆர்எஸ் மற்றும் வாகையில் உள்ள சிஎச்சி மருத்துவமனையில் நோயாளிகளுடன் பிரதமர் உரையாடினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குஜராத்தின் ஆரோக்கியத்திற்கு இது ஒரு மகத்தான நாள் என்றும், இந்தத் திட்டங்களை குறித்த நேரத்தில் நிறைவு செய்ததற்காக அதனுடன், தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கூறினார். உலகின் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட பலன்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு ஆகியவை குஜராத் மக்களுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த மருத்துவச் சலுகைகள் கிடைப்பதால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லமுடியாதவர்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லலாம் என்றும், அங்கு உடனடியாக சேவை செய்ய மருத்துவக் குழுக்கள் அனுப்பப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, 1200 படுக்கை வசதியுடன் கூடிய தாய் மற்றும் குழந்தைகள் நல அதிநவீன பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
சிறுநீரக நோய் சிகிச்சை மையம் மற்றும் இதய சிகிச்சைக்கான யுஎன் மேத்தா மையம் ஆகியவற்றின் சேவை மற்றும் திறன்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தின் புதிய கட்டிடத்தில் மேம்படுத்தப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்ற வசதிகளும் உள்ளன. சைபர்-நைஃப் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் கிடைக்கும் நாட்டின் முதலாவது அரசு மருத்துவமனை இது என்று கூறினார். வளர்ச்சியின் புதிய உச்சத்தை குஜராத் வேகமாக அடைந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். குஜராத்தின் வளர்ச்சி வேகத்தை, சில நேரங்களில் அவற்றைக் கணக்கிடுவது கூட கடினம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
20-25 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நிலவிய எதிர் சூழ்நிலை குறித்து பேசிய பிரதமர், சுகாதாரத் துறையின் பின்தங்கிய நிலை, தவறான கல்வி, மின் பற்றாக்குறை, தவறான நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவை குறித்து பட்டியலிட்டார். இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி குஜராத் இன்று முன்னேறி வருவதாக கூறினார். அதி நவீன மருத்துவமனைகளில் குஜராத் முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்தார். கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, குஜராத்துக்கு இன்று எந்தப் போட்டியும் இல்லை என்று கூறினார். குஜராத் முன்னேறி வருகிறது என்றும், புதிய வளர்ச்சிப் பாதைகளை அடைகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், குஜராத்தில் தண்ணீர், மின்சாரம், சட்டம்-ஒழுங்கு ஆகியவை பெரிதும் மேம்பட்டுள்ளன என்று கூறினார். குஜராத்திற்காக அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் அரசு இன்று அயராது உழைத்து வருவதாக திரு மோடி குறிப்பிட்டார்.
இன்று திறக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்கள் குஜராத்திற்கு புதிய அடையாளத்தை அளித்துள்ளதாகவும், இந்த திட்டங்கள் குஜராத் மக்களின் திறன்களுக்கான சின்னங்கள் என்றும் பிரதமர் கூறினார். நல்ல சுகாதார வசதிகளுடன், உலகின் தலைசிறந்த மருத்துவ வசதிகளும் தற்போது நமது மாநிலத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதை குஜராத் மக்கள் பெருமை அடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இது குஜராத்தின் மருத்துவ சுற்றுலாத் திறனுக்கும் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
நல்ல சுகாதார உள்கட்டமைப்பிற்காக எண்ணம் மற்றும் கொள்கைகள் இரண்டும் இணைந்திருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அரசு மனப்பூர்வமான நோக்கத்துடன் மக்கள் பிரச்சனைகளில் அக்கறை செலுத்தவில்லை என்றால், பொருத்தமான சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். ஒட்டுமொத்த அணுகுமுறையுடன் முழு மனதுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அவற்றின் முடிவுகள் சமமாக பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இது குஜராத்தின் வெற்றி மந்திரம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் மருத்துவ அறிவியலின் ஒப்புமையை எடுத்துக் கூறிய பிரதமர் முதலமைச்சராக தாம் ‘அறுவை சிகிச்சை’ மேற்கொண்டதாக கூறினார். அதாவது பழைய பொருத்தமற்ற அமைப்புகளை நோக்கத்துடனும், பலத்துடனும் களையெடுத்ததாகக் கூறினார். இரண்டாவது 'மருந்து' அதாவது அமைப்பை வலுப்படுத்துவதற்கான எப்போதும் புதிய கண்டுபிடிப்புகள், மூன்றாவது 'கவனிப்பு' அதாவது சுகாதார அமைப்பின் வளர்ச்சிக்காக உணர்வுபூர்வமாக பணியாற்றுதல். ஆகியவற்றை குறிப்பிட்டார். விலங்குகள் மீது அக்கறை கொண்ட முதல் மாநிலமாக குஜராத் உள்ளது என்று அவர் கூறினார். நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு பூமி ஒரு சுகாதார இயக்கம் பலப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அரசு அக்கறையுடன் செயல்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். "நாங்கள் மக்கள் மத்தியில் சென்று, அவர்களின் இக்கட்டான நிலையைப் பகிர்ந்து கொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார். பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் அவர்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த அமைப்பு ஆரோக்கியமாக மாறியபோது, குஜராத்தின் சுகாதாரத் துறையும் ஆரோக்கியமானதுடன், நாட்டிலேயே குஜராத் முன்மாதிரியாக பேசப்படுகிறது என்று கூறினார்..
குஜராத்தில் இருந்து கற்றுக்கொண்டதை மத்திய அரசின் ஆட்சியில் தாம் பயன்படுத்தியதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில், மத்திய அரசு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டியுள்ளது என்றும், இதன் மூலம் குஜராத்தும் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். "குஜராத் மாநிலத்தில் முதலாவது மருத்துவமனை ராஜ்கோட்டில் அமைந்துள்ளது என்று திரு மோடி மேலும் கூறினார். குஜராத்தில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், மருத்துவ ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மருந்து ஆராய்ச்சி ஆகியவற்றில் குஜராத் சிறந்து விளங்குவது மற்றும் உலகளவில் அது பெயர் விளங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
அரசு உணர்வு பூர்வமாக செயல்பட்டால், நலிந்த பிரிவினர் மற்றும் சமுதாயத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் உள்ளிட்ட சமூகம் மிகப்பெரிய பலனைப் பெறுவதாக பிரதமர் குறிப்பிட்டார். சிசு இறப்பு விகிதம் மற்றும் தாய் - சேய் இறப்பு விகிதம் அரசுக்கு பெரும் கவலையாக இருந்த காலம் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு முந்தைய அரசுகள், விதியை குற்றம் சாட்டியதாக கூறினார். நமது தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான நிலைப்பாட்டை எடுத்தது எங்களுடைய அரசுதான் என்று கூறினார். "கடந்த இருபது ஆண்டுகளில், நாங்கள் தேவையான கொள்கைகளை உருவாக்கி, அவற்றை செயல்படுத்தியதன் விளைவாக, இறப்பு விகிதங்கள் பெருமளவு" குறைந்துள்ளது என்று திரு மோடி மேலும் கூறினார். “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” ”பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற இயக்கம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், தற்போது புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். இத்தகைய வெற்றிகளுக்கு குஜராத் அரசின் ‘சிரஞ்சீவி’ மற்றும் ‘கில்கிலாஹத்’ போன்ற கொள்கைகளே காரணம் என்று பிரதமர் கூறினார். குஜராத்தின் வெற்றிகளும், முயற்சிகளும் மத்திய அரசின் ‘இந்திரதனுஷ்’ மற்றும் ‘மாத்ரு வந்தனா’ போன்ற பணிகளுக்கு வழி காட்டுவதாக திரு மோடி மேலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நிறைவாக உரையாற்றிய பிரதமர், ஏழைகள் மற்றும் தேவை உடையவர்களின் சிகிச்சைக்காக ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களை சுட்டிக்காட்டினார். இரட்டை எந்திர அரசாங்கத்தின் வலிமையைப் பற்றி விவரித்த பிரதமர், ஆயுஷ்மான் பாரத் மற்றும் முதலமைச்சர் அமிர்தம் திட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குஜராத் மாநிலத்தில் ஏழைகளின் சுகாதாரத் தேவைகளுக்கு சேவை செய்கிறது என்று கூறினார். "உடல்நலம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்கால திசையை தீர்மானிக்கும் என்று அவர் கூறினார். 2019 ஆம் ஆண்டில் 1200 படுக்கை வசதியுடன் கூடிய குடிமை மருத்துவமனையை உதாரணமாக கூறிய பிரதமர், ஒரு வருடத்திற்குப் பிறகு உலகையே தாக்கிய கொவிட்-19 தொற்றுநோயின் போது அதே மருத்துவமனை மிகப்பெரிய சுகாதார மையமாக உருவெடுத்து மக்களுக்கு சேவை செய்ததாக குறிப்பிட்டார். "தொற்றுநோயின் போது அந்த ஒற்றை சுகாதார உள்கட்டமைப்பு ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியது" என்று அவர் மேலும் கூறினார். தற்போதைய சூழல்களை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்திற்காகவும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர், தனது உரையை நிறைவு செய்தார். "நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று திரு மோடி கூறினார்.
நிகழ்ச்சியில் நிறைவாக உரையாற்றிய பிரதமர், ஏழைகள் மற்றும் தேவை உடையவர்களின் சிகிச்சைக்காக ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களை சுட்டிக்காட்டினார். இரட்டை எந்திர அரசாங்கத்தின் வலிமையைப் பற்றி விவரித்த பிரதமர், ஆயுஷ்மான் பாரத் மற்றும் முதலமைச்சர் அமிர்தம் திட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குஜராத் மாநிலத்தில் ஏழைகளின் சுகாதாரத் தேவைகளுக்கு சேவை செய்கிறது என்று கூறினார். "உடல்நலம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்கால திசையை தீர்மானிக்கும் என்று அவர் கூறினார். 2019 ஆம் ஆண்டில் 1200 படுக்கை வசதியுடன் கூடிய குடிமை மருத்துவமனையை உதாரணமாக கூறிய பிரதமர், ஒரு வருடத்திற்குப் பிறகு உலகையே தாக்கிய கொவிட்-19 தொற்றுநோயின் போது அதே மருத்துவமனை மிகப்பெரிய சுகாதார மையமாக உருவெடுத்து மக்களுக்கு சேவை செய்ததாக குறிப்பிட்டார். "தொற்றுநோயின் போது அந்த ஒற்றை சுகாதார உள்கட்டமைப்பு ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியது" என்று அவர் மேலும் கூறினார். தற்போதைய சூழல்களை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்திற்காகவும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர், தனது உரையை நிறைவு செய்தார். "நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று திரு மோடி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரு சி ஆர் பட்டீல், திரு நர்ஹரி அமீன், திரு கிரித்பாய் சோலங்கி மற்றும் திரு ஹஸ்முக்பாய் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Modern medical facilities in Ahmedabad will benefit the citizens. pic.twitter.com/CUMOviKJL7
— PMO India (@PMOIndia) October 11, 2022
Gujarat is rapidly scaling new heights of development. pic.twitter.com/TcKzb3s219
— PMO India (@PMOIndia) October 11, 2022
Gujarat is moving ahead and scaling new trajectories of growth. pic.twitter.com/lVA2To4XfP
— PMO India (@PMOIndia) October 11, 2022
We have worked keeping a holistic approach in mind. This has hugely benefitted in Gujarat's development journey. pic.twitter.com/Hf9lxzZqG4
— PMO India (@PMOIndia) October 11, 2022
In last 8 years, we have worked to augment India's healthcare infrastructure. pic.twitter.com/qGgmwtkRIk
— PMO India (@PMOIndia) October 11, 2022
Our government is sensitive towards the weaker sections, mothers and sisters. pic.twitter.com/9THAh7BtiW
— PMO India (@PMOIndia) October 11, 2022