விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்ய உதவுவதன் மூலம், அவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில், நாடு முழுவதும் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
மத்திய அரசு பட்ஜெட்டில் ரூ.6,865 கோடி ஒதுக்கி இருப்பதுடன், ஒவ்வொரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பிற்கும் தலா ரூ.15 லட்சம் வழங்கியிருப்பது, விவசாயிகளுக்கு பெருமளவு பயனளிப்பதாக இருக்கும். விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பின் உறுப்பினர்கள், தங்களது செயல்பாடுகளை தாங்களே ஒருங்கிணைந்து நிர்வகித்துக் கொள்வதன் மூலம், தொழில்நுட்பம், இடுபொருள், நிதியுதவி மற்றும் வருவாயை குறுகிய காலத்தில் அதிகரித்துக் கொள்ளலாம். சித்திரக்கூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகள் எப்போதும் உற்பத்தியாளர்களாக மட்டும் இருந்து வந்தனர், ஆனால், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பின் உதவியால், தற்போது வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது. பயிர்களை நடவு செய்வதோடு, திறமையான வணிகர்களாகவும் செயல்பட்டு, உரிய விலையைப் பெறலாம்”.