தூத்துக்குடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் மரங்கள் நடும் முன்முயற்சிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிபாதைகள் அமைச்சகத்தால் தூத்துக்குடி துறைமுகத்தில் நடப்பட்ட 10,000 மரக்கன்றுகள், எதிர்காலத் தலைமுறையினர் பயனடையும் வகையில் தற்போது மரங்களாக வளர்ந்துள்ளன.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிபாதைகள் அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவிற்குப் பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான மற்றும் தொலைநோக்குப் பார்வையுடனான இந்த முயற்சிக்காக, தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு @vocpa_tuticorin நல்வாழ்த்துகள்.”
पर्यावरण सुरक्षा की दिशा में इस नेक और दूरदर्शी प्रयास के लिए @vocpa_tuticorin को बहुत-बहुत बधाई। https://t.co/QLFmlfMvxV
— Narendra Modi (@narendramodi) April 23, 2023
சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான மற்றும் தொலைநோக்குடன் கூடிய முயற்சிக்கு @vocpa_tuticorin க்கு நல்வாழ்த்துகள். https://t.co/QLFmlfMvxV
— Narendra Modi (@narendramodi) April 23, 2023