பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜபல்பூரின் தொன்மையான சங்கரம் சாகர் ஏரிக்கு புத்துயிர் வழங்கிய மக்களின் முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஜபல்பூரின் தொன்மையான சாகர் ஏரிக்கு புத்துயிர் வழங்கிய மக்களின் முயற்சிகள் போற்றுதற்குரியது என்றார். ஜபல்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ் சிங் தனது ட்விட்டர் பதிவில், மக்கள் பிரதிநிதிகள், ஜபல்பூர் ஆட்சித் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரோடு சங்கரம் சாகர் ஏரியின் சுற்றுப் பகுதிகளை அழகுப்படுத்தும் நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டேன் என்றார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜபல்பூரின் தொன்மையான சாகர் ஏரியை புத்துயிர் வழங்கி புதுப்பித்தலுக்கு மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் போற்றுதற்குரியது”
जबलपुर के प्राचीन संग्राम सागर के पुनरोद्धार के लिए लोगों के श्रमदान का यह प्रयास बहुत ही प्रशंसनीय है। https://t.co/2CFClo3ERZ
— Narendra Modi (@narendramodi) April 24, 2023