மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) காவலர் (பொதுப் பணி -ஜீடி) தேர்வுகளை 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தும் உள்துறை அமைச்சகத்தின் முடிவை ‘முன்மாதிரியானது’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அலுவலக ட்விட்டர் செய்திக்குப் பிரதமர் பதிலளித்தார்:
"நமது இளைஞர்களின் விருப்பங்களுக்கு சிறகுகளை வழங்கும் ஒரு முன்மாதிரி முடிவு இது! ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாகக் கருதப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நமது பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதியாகும் இது."
A pathbreaking decision, which will give wings to the aspirations of our youth! This is a part of our various efforts to ensure language is not seen as a barrier in fulfilling one’s dreams. https://t.co/rixlkUgMY7
— Narendra Modi (@narendramodi) April 15, 2023